ஓமன் நாட்டுக்கு இந்திய கடற்படை கப்பல்கள் வருகை
ஓமன் நாட்டுக்கு இந்திய கடற்படை கப்பல்கள் வருகை
ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட் நகரில் உள்ள சுல்தான் காபூஸ் துறைமுகத்துக்கு இந்தியாவின் கடற்படை கப்பல்கள் ஐ.என்.எஸ். டிர், ஐ.என்.எஸ். சர்துல், ஐ.சி.ஜி.எஸ். வீரா ஆகிய மூன்று கப்பல்கள் வந்தன.இந்த கப்பல்களுக்கு ஓமன் கடற்படை கப்பல் அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இரு தரப்பு வீரர்களும் பல்வேறு பயிற்சிகளில் ஈடுபட்டனர்.
இந்த கப்பல்களை இந்திய பள்ளிக்கூட மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். அவர்களுக்கு கப்பல் அதிகாரிகள் பல்வேறு தகவல்கள் குறித்து விவரித்தனர். கப்பல்படை இசைக்குழுவின் சார்பில் மஸ்கட்டில் உள்ள வணிக வளாகத்தில் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். மேலும் இந்திய கடற்படை வீரர்களுக்கு இந்திய தூதர் அமித்நாரங் விருந்தளித்தார்.
Next Story