குவைத்தில் சுகாதார பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

குவைத்தில் மொபைல் போன் உள்ளிட்ட சாதனங்களை அதிகமாக பயன்படுத்துவதால் ஏற்படும் சுகாதார பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

குவைத்தில் இந்திய முஸ்லிம் சங்கத்தின் பெண்கள் பிரிவின் சார்பில் சமூகத்தில் உள்ள சவால்கள் மற்றும் மொபைல் போன் உள்ளிட்ட சாதனங்களை அதிகமாக பயன்படுத்துவதால் ஏற்படும் சுகாதார பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மாணவர் முஹம்மது சுலைமான் ஷரீஃப் தொடக்கமாக இறைவசனங்களை ஓதினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய சமூக ஆர்வலர் பர்வேஸ் ஹனீஃப் தனது உரையில் உண்மையான சுதந்திரம் என்பது தாங்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் சிறப்பான வகையில் செயல்பட வேண்டும். ஒழுக்க விழுமங்களை சரியான முறையில் கடைப்பிடிக்க வேண்டும். இதன் மூலம் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோரின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்றார்.

குவைத் புற்றுநோய் கட்டுப்பாட்டு மையத்தின் டாக்டர் சுசோவன்னா சுஜித் நாயர் பேசியதாவது மொபைல் போன் உள்ளிட்ட சாதனங்களை அதிகமாக பயன்படுத்துவதால் பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. எனவே அவற்றை அளவுடன் பயன்படுத்த வேண்டியது அவசியம். குறிப்பாக பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும் என்றார். அதனை தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. சமீனா கான் நன்றி கூறினார். ஃபயாஸ் உள்ளிட்ட குழுவினர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்புடன் செய்திருந்தனர்.

Tags

Next Story