அமெரிக்கா முத்தமிழ் நூல் ஆய்வுப் பேரவை சார்பில் நூல் ஆய்வு 30 ஆய்வுரை

அமெரிக்கா முத்தமிழ் நூல் ஆய்வுப் பேரவை சார்பில் நூல் ஆய்வு 30 ஆய்வுரை

அமெரிக்கா முத்தமிழ் நூல் ஆய்வுப் பேரவை சார்பில் வரும் 2 ந் தேதி நூல் ஆய்வு 30 ஆய்வுரை கருத்துரை நடைபெற உள்ளது.

அமெரிக்கா முத்தமிழ் நூல் ஆய்வுப் பேரவை சார்பில் வரும் 2 ந் தேதி நூல் ஆய்வு 30 ஆய்வுரை கருத்துரை நடைபெற உள்ளது.

அமெரிக்கா முத்தமிழ் நூல் ஆய்வுப் பேரவை மற்றும் அமெரிக்க முத்தமிழ் தொலைக்காட்சி ஆகியவை இணைந்து நூல் ஆய்வு 30 என்ற தலைப்பில் ஆய்வுரை மற்றும் கருத்துரை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் முனைவர் த.ராஜீவ்காந்தி எழுதிய “புதுமைப் புரட்சித்துறவி வள்ளலாரின் சமூகச்சீர்திருத்தங்களும் மாற்றங்களும்" - நூல் ஆய்வு குறித்த ஆய்வுரை நிகழ்ச்சி வரும் 02.03.2024 சனிக்கிழமை இந்திய நேரப்படி மாலை 7.00 மணிக்கு சமூக வலைதளத்தில் நடைபெற உள்ளது. தமிழ்மாமணி தாழை இரா. உதயநேசன் முன்னிலை வகிக்கிறார். மாதவரம் வள்ளலார் வழி சுத்த சன்மார்க்க அறக்கட்டளை நிறுவுநர் மற்றும் தலைவர் வள்ளலார் வழி புனிதன் வாழ்த்துரை வழங்க உள்ளார்.

முன்னதாக அ.மு.நூலாய்வுப் பேரவை நிர்வாக இயக்குநர் முனைவர் செ.சு.நா. சந்திரசேகரன் வரவேற்புரை ஆற்ற உள்ளார். ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் தலைவரும், திருவருட்பா ஆய்வாளருமான செந்நெறி பா.தண்டபாணி ஆய்வுரை நிகழ்த்துகிறார். முனைவர் த. ராஜீவ்காந்தி ஏற்புரை வழங்குகிறார். தொடர்ந்து வரும் வாரங்களில் அமெரிக்கா முத்தமிழ் நூல் ஆய்வுப் பேரவைக்கு ஆய்விற்காக அனுப்பி வைக்கப்பட்ட நூல்கள் ஆய்வு செய்யப்படும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம். இதில் புதுமைப் புரட்சித்துறவி வள்ளலாரின் சமூகச்சீர்திருத்தங்களும் மாற்றங்களும் - தன்முனைக் கவிதைகள் - நூல் ஆய்வும் நடத்தப்பட உள்ளது. அமெரிக்க முத்தமிழ் தொலைக்காட்சி நேரலையில் நடைபெறும் இந்நிகழ்வில் நிறுவுநர் தமிழ்மாமணி தாழை. இரா. உதயநேசன், அமெரிக்கா முத்தமிழ் நூல் ஆய்வுப் பேரவை நிர்வாக இயக்குநர் முனைவர் செ.சு.நா. சந்திரசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனா்.

Join Zoom Meeting

https://us02web.zoom.us/j/6264919582?pwd=b0Z6bENLUHVEMTlQcUNMUmphcHVHdz09&omn=87866631929

Meeting ID: 626 491 9582 - Passcode: 6643

Tags

Read MoreRead Less
Next Story