மஸ்கட்டில் இந்தியா- ஓமன் இடையேயான வரலாற்று தொடர்பை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி

மஸ்கட்டில் இந்தியா- ஓமன் இடையேயான வரலாற்று தொடர்பை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி

மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் மாண்ட்வியில் இருந்து மஸ்கட்டிற்கு என்ற தலைப்பில் இரு நாடுகளுக்கு இடையேயான வரலாற்று தொடர்பை ஆவணப்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இந்தியா- ஓமன் இடையே வர்த்தக மற்றும் கலாசார தொடர்பு பாரம்பரியமாக இருந்து வருகிறது. இருநாடுகளுக்கும் இடையிலான கலாசார பரிமாற்றங்கள் குறித்து ஆவணப்படுத்தும் வகையில் 'மாண்ட்வியில் இருந்து மஸ்கட்டிற்கு' என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு இந்திய தூதர் அமித் நாரங் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக ஷார்ஜா அமெரிக்க பல்கலைக்கழக பேராசிரியரும், வரலாற்று ஆய்வாளருமான ஜேம்ஸ் கலந்துகொண்டு இருநாடுகளுக்கு இடையிலான வரலாற்று தொடர்பை விவரித்தார்.

இந்தியாவின் கலைப்படைப்புகளை காட்சிப்படுத்தும் வகையில் ராமர் கதை என்ற தலைப்பில் ஓவியங்கள் இடம் பெற்றது. இந்த ஓவியங்களை ஓமனில் வசிக்கும் இந்திய பெண்கள் வரைந்திருந்தனர். சமீபத்தில் இந்தியாவில் திறக்கப்பட்ட ராமர் கோவிலை சிறப்பு செய்யும் வகையில் இந்த ஓவியங்கள் இடம்பெற்றது. குறிப்பாக ராமர் படங்கள், அயோத்தி கோவிலை ஓவியமாக வரைந்து காட்சிப்படுத்தி இருந்தது பார்வையாளர்களை கவர்ந்தது.

Tags

Next Story