துபாயில் தமிழ்நாடு விஞ்ஞானிகளுக்கு அப்துல் கலாம் விருது

துபாயில் தமிழ்நாடு விஞ்ஞானிகளுக்கு அப்துல் கலாம் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது

துபாயில் எம்.டி.எஸ். ஈவெண்ட்ஸ் மற்றும் மேனேஜ்மெண்ட் கன்சல்டண்ட் நிறுவனத்தின் சார்பில் தமிழ்நாடு விஞ்ஞானிகள் டாக்டர் எம்.ஏ. ஹனீஃபா, டாக்டர் சித்திரை பொன்செல்வன், திருநெல்வேலி கிங்க்ஸ் குரூப் அதிபர் முகம்மது ரியாஸ் உள்ளிட்டோருக்கு அப்துல் கலாம் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. துபாய் லேவெண்டர் நட்சத்திர ஓட்டலில் எம்.டி.எஸ். ஈவெண்ட்ஸ் மற்றும் மேனேஜ்மெண்ட் கன்சல்டண்ட் நிறுவனத்தின் சார்பில் கல்வியாளர்கள் சந்திப்பு சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ரியாஸ் இறைவசனங்களை ஓதினார். இந்த நிகழ்ச்சிக்கு எம்.டி.எஸ். ஈவெண்ட்ஸ் மற்றும் மேனேஜ்மெண்ட் கன்சல்டண்ட் நிறுவனத்தின் நிறுவனர் கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ.முகம்மது முகைதீன் தலைமை தாங்கி, பேசும் போது, இந்த ஆண்டின் முதல் நிகழ்வாக தமிழக கல்வியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதில் ஆர்வத்துடன் கல்வியாளர்கள், வர்த்தக பிரமுகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றிருப்பது சிறப்பானது என்றார். திருச்சி முஹம்மது ரஹ்மத்துல்லா வரவேற்புரை நிகழ்த்தினார்.

தமிழக விஞ்ஞானிகள் டாக்டர் எம்.ஏ. ஹனீஃபா, டாக்டர் சித்திரை பொன் செல்வன், தொழிலதிபர் முகம்மது ரியாஸ் உள்ளிட்டோருக்கு அப்துல் கலாம் விருதை முனைவர் ஆ. முகம்மது முகைதீன் வழங்கி கவுரவித்தார். மேலும் திருக்குறள் தொடர்பான சர்வதேச கருத்தரங்கில் பங்கேற்றதற்காக ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத்துக்கு அசிஸ்ட் உலக சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டது. அயலக தமிழர் தினவிழாவில் விருது பெற்ற ஜெசிலா பானு பொன்னாடை அண்வித்து கவுரவிக்கப்பட்டார். ஏற்புரை நிகழ்த்திய டாக்டர் எம்.ஏ. ஹனீஃபா அமீரகத்தில் கல்வியாளர்கள் அனைவரையும் சந்திப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தனது விரால் மீன் ஆய்வு சர்வதேச அளவில் பேசப்பட்டு வருகிறது. இந்த பணி குறித்து எனது யூடியூப் தளத்தில் பதிவிட்டுள்ளேன். இதனை அனைவரும் பார்த்து பயன்பெற வேண்டும். இந்த நிகழ்ச்சியில் எனக்கு அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். துபாய் கர்டின் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சித்துறை இயக்குநர் முனைவர் சித்திரை பொன் செல்வன் தனது உரையில் இன்று உலகில் நிலைத்தன்மை குறித்து அதிகமாக பேசப்பட்டு வருகிறது. நமது மண்வளம் வளமானதாக இருக்க வேண்டியது அவசியம். நமது எதிர்கால தலைமுறையின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார். திருநெல்வேலி கிங்க்ஸ் குரூப் அதிபர் முகம்மது ரியாஸ் மற்றும் தன்முனைப்பு பயிற்சியாளர் முகம்மது ரியாஸ் நமது வர்த்தகத்தை நிர்வகிப்பதன் முக்கியத்துவம் உள்ளிட்டவை குறித்து பேசினார். இந்நிகழ்ச்சியில் அன்வர் குழுமத்தின் மேலாண்மை இயக்குநர் அன்வர்தீன், அபுதாகிர், ரியாஸ், மன்சூர் அலி கான், சொக்கம்பட்டி முகம்மது கபீர், ஃபாத்திமா தாஹிர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story