துபாயில் அலுமினிய கேன்கள் சேகரிப்பு நிகழ்ச்சி

துபாயில் அமீரக சுற்றுச்சூழல் குழுமத்தின் சார்பில் உபயோகித்த அலுமினிய கேன்கள் சேகரிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

துபாயில் அமீரக சுற்றுச்சூழல் குழுமத்தின் சார்பில் உபயோகித்த அலுமினிய கேன்கள் சேகரிக்கும் நிகழ்ச்சி நடந்தது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் அமீரகம், இந்தியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் தன்னார்வத்துடன் அலுமினிய கேன்களை சேகரித்து வழங்கினர். அவர்களுக்கு பாராட்டு சான்றிதழை அமீரக சுற்றுச்சூழல் குழுமத்தின் தலைவி ஹபிபா அல் மராசி வழங்கி கவுரவித்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் 7 ஆயிரத்து இரண்டு கிலோ கேன்கள் சேகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story