துபாயில் ஐ.டியில் சிறப்பான பணி மேற்கொண்டு வரும் தமிழருக்கு விருது

துபாயில் ஐ.டியில் சிறப்பான பணி மேற்கொண்டு வரும் தமிழருக்கு விருது

துபாய் நகரில் அல் ஹிபா தகவல் அல் ஹிபா தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக ஹசிமுதீன் இருந்து வருகிறார். இந்த நிறுவனம் தகவல் தொழில்நுட்பத்துறையில் திட்டப்பணிகளை சிறப்பான முறையில் மேற்கொண்டு வருவதற்காக ஜி.இ.சி. ஊடக நிறுவனம் விருது வழங்க தேர்வு செய்யப்பட்டது. இந்த விருது துபாயில் நடந்த விழாவில் அந்த அமைப்பின் தலைமை செயல் அதிகாரியால் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த விருதைப் பெற்ற அல் ஹிபா தகவல் அல் ஹிபா தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஹசிமுதீன் இராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளையை சேர்ந்தவர் ஆவார். திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் எம்.சி.ஏ. முதுநிலை படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விருது பெற்றது குறித்து ஹசிமுதீன் கூறியிருப்பதாவது : தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்காக இந்த விருது கிடைத்திருப்பது தனது உழைப்புக்கு கிடைத்த வெற்றி ஆகும். பல்வேறு புதிய திட்டப்பணிகள் கிடைத்து வருகின்றன. மேலும் முதலீடுகள் கிடைக்கும் பட்சத்தில் இந்த பணிகளை விரிவுபடுத்தி தமிழக இளைஞர்களுக்கு அதிகமான வேலைவாய்ப்பு வழங்க உதவியாக இருக்கும் என்றார். அவருக்கு திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க அமீரகப் பிரிவின் தலைவர் பூதமங்கலம் ஜியாவுதீன், துணைத் தலைவர் முதுவை ஹிதாயத், பொதுச் செயலாளர் திண்டுக்கல் ஜமால் முஹைதீன் உள்ளிட்ட நிர்வாகக் குழுவினர் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story