அய்மான் குடும்பத் திருமண விழா
திருமண விழா
அய்மான் சங்க முன்னாள் செயலாளர் பூந்தை ஹாஜா மைதீன் மகள் அஃப்ரா ஷிரின் மணமகளுக்கும், இராஜகிரி முஹம்மது பாரூக் புதல்வர் முஹம்மது ரியாஸ் மணமகனுக்கும் இராஜகிரி காயிதே மில்லத் திருமண மஹாலில் அய்மான் பைத்துல்மால் தலைவர் அதிரை ஏ.சாகுல் ஹமீது ஹாஜியார் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் துணைச் செயலாளர், அய்மான் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி வாழ்த்துரை வழங்கினார்.
அபுதாபி அய்மான் சங்க தலைவர் கீழக்கரை முஹம்மது ஜமாலுதீன், அய்மான் சங்க துணைத் தலைவர் ஆவை. முஹம்மது அன்சாரி, பொருளாளர் பசுபதிகோவில் சாதிக் பாட்சா, செயலாளர் குத்தாலம் நவ்சாத் அலி , முன்னாள் செயலாளர் மவ்லவி முஹம்மது ஹாரிஸ், முஸ்லிம் லீக் கடலூர் தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி பொருப்பாளர் இம்தியாஸ் ஆகியோரும் மணமக்களை வாழ்த்தினர்.
அய்மான் ஆவணப் படம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முன்னாள் துணைத் தலைவர் லால்பேட்டை மர்ஹும் தளபதி சபிகுர் ரஹ்மான் அவர்களின் மணிவிழா மலர் மற்றும் சமூக சீர்திருத்த நூல்களை உருவாக்கியவர் பூந்தை ஹாஜா மைதீன் அவரது அன்பு மகளார் திருமணத்தில் அமீரகத்தில் இருந்து அய்மான் நிர்வாகிகள் பெருமளவில் வருகை புரிந்து மணமக்களை வாழ்த்தினர்.