பஹ்ரனில் சிறந்த சமூக சேவகர் விருது:

பஹ்ரனில் சிறந்த சமூக சேவகர் விருது:

பஹ்ரனில் சிறப்புற சமூக சேவை புரிந்து வரும், லைட்ஸ் ஆஃப் கைன்ட்னஸ் (சமூக உதவி இயக்கம்) நிறுவனர் சையத் ஹனீஃப் சிறந்த சமூக சேவகர் விருது பெற்றுள்ளார். பஹ்ரைன் நாட்டில், அத்லியாவில் வைத்து 'பான் சாங் தாய்' உணவகத்தில் நடைபெற்ற குடும்ப சௌஹர்தவேதியின் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் விருது வழங்கப்பட்டது.

அவரது தொண்டு முயற்சிகள், சமூகப் பாராட்டுகளின் சரம் மற்றும் அவர் சேவை செய்த ஆயிரக்கணக்கான மக்களின் நலன் பற்றி விழாவில் நன்றியுடன் நினைவு கூறப்பட்டது. 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவர் தொடங்கிய 'லைட்ஸ் ஆஃப் கைன்ட்னஸ்' முயற்சியின் மூலம் 1000 நாட்களில் 60,000 க்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்கள்' மற்றும் பாதுகாப்புப் பொருட்கள் இடைவிடாமல் விநியோகம் செய்யப்பட்டது. பஹ்ரைனைச் சுற்றியுள்ள ஏழை மக்களுக்கு தினசரி அடிப்படையில் இலவச உணவு விநியோகம் மூலம் இந்த முயற்சி தொடர்கிறது.

Tags

Read MoreRead Less
Next Story