துபாயில் மனிதநேய கலாச்சாரப் பேரவை சார்பில் இரத்ததான முகாம்

துபாயில் மனிதநேய கலாச்சாரப் பேரவை சார்பில் இரத்ததான முகாம்

அமீரகத்தின் 52-வது தேசிய தினத்தையொட்டி மனிதநேய கலாச்சாரப் பேரவை (MKP) துபாய் மாநகரம் ஏற்பாட்டில் அல் பரஹா ஆஸ்பத்திரி ரத்ததான மையத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் அதிகமான மக்கள் ஆர்வமாக பங்கு பெற்று ரத்ததானம் செய்தனர்.

அமீரக மனிதநேய கலாச்சாரப் பேரவையின் துணைச் செயலாளர் ரஜாக், ஃபாயஸ், துபாய் மாநகர செயலாளர் ஷபிக், நாச்சிகுளம் ரசீது, யாசிர் மற்றும் புஹாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தன்னார்வத்துடன் ரத்ததானம் செய்த மனித நேய கலாச்சாரப் பேரவையின் நிர்வாகிகள் உள்ளிட்ட தன்னார்வலர்களுக்கு ரத்ததான மைய அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags

Next Story