ஷார்ஜா அமீரகப் பிரிவின் சார்பில் நூல் வெளியீட்டு விழா

ஷார்ஜாவில் அமீரகப் பிரிவின் சார்பில் மு.முகமது யூசுப் எழுதிய நூல் வெளியீட்டு விழா

ஷார்ஜாவில் உள்ள ஐ.டி.எம். சர்வதேச பல்கலைக்கழகத்தில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க அமீரகப் பிரிவின் சார்பில் உடன்குடி கவின்முகில் மு.முகமது யூசுப் எழுதிய சீராப்புராணத்தில் ஒளிரும் உவமையும் உண்மையும் – ஓர் அறிவியல் ஆய்வு என்ற நூலின் பாகம் 1 மற்றும் 2 ஆகிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா சிறப்புடன் நடந்தது. இந்த விழாவுக்கு திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் ஓய்வு பெற்ற துணை முதல்வர் கம்பம் பீ.மு.மன்சூர் தலைமை தாங்கினார். மாணவர்கள் ஹம்தான் மற்றும் அத்னான் ஆகியோர் இறைவசனங்களை ஓதினர்.

இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் அமீரக அமைப்பாளர் முஹிப்புல் உலமா ஏ.முஹம்மது மஃஹ்ஃரூப் முன்னிலை வகித்தார். இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் அமீரக ஒருங்கிணைப்பாளர் முதுவை ஹிதாயத் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்திய யூனியன் முஸ்லிம் பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபுபக்கர், உடன்குடி கவின்முகில் மு.முகமது யூசுப் எழுதிய சீறாப்புராணத்தில் ஒளிரும் உவமையும் உண்மையும் – ஓர் அறிவியல் ஆய்வு என்ற நூலின் பாகம் 1 மற்றும் 2 ஆகிய இரண்டு நூல்களை வெளியிட முதல் பிரதிகளை முஹிப்புல் உலமா ஏ.முஹம்மது மஃஹ்ஃரூப் பெற்றுக் கொண்டார். திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க பொதுச் செயலாளர் திண்டுக்கல் ஜமால் முஹைதீன், நிர்வாகக்குழு உறுப்பினர் நவாசுதீன், துபாய், சகினா ஈவெண்ட்ஸ் மேலாண்மை இயக்குநர் கவிஞர் நூர் ஃபாத்திமா, அமீரக தமிழ் தொழில் முனைவோர் மற்றும் திறனாளர் கூட்டமைப்பின் நிர்வாகி கால்டுவெல், ஷார்ஜா தி எமிரேட்ஸ் நேஷனல் பள்ளிக்கூடத்தின் நான்காம் வகுப்பு மாணவர் மாஸ்டர் முகுந்தன் மன்னர் மன்னன், குமரி மாவட்டம் மணலிக்கரை அப்துல் அலீம் உள்ளிட்டோர் நூல் ஆய்வுரை நிகழ்த்தினர்.

அமீரக காயிதேமில்லத் பேரவை துணைப் பொதுச் செயலாளர் இராமநாதபுரம் பரக்கத் அலி, துபாய் மண்டல செயலாளர் கீழக்கரை காமில், அபுதாபி அய்மான் சங்க துணை தலைவர் ஆவை அன்சாரி, பேராசிரியர் கலந்தர், ஐடிஎம். சர்வதேச பல்கலைக்கழக்த்தின் பேராசிரியர் முஹிப்புல்லா, சொறிப்பாரைப்பட்டி ஜாஹிர் ஹுசைன், மணமேல்குடி அம்ஜத்கான் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். உடன்குடி கவின்முகில் மு. முகமது யூசுப் ஏற்புரை நிகழ்த்தினார். முன்னாள் மாணவர் நிர்வாகக்குழு உறுப்பினர் கட்டுமாவடி பைசல் ரஹ்மான் நன்றி கூறினார். இந்த விழாவில் அமீரக காயிதே மில்லத் பேரவையின் மக்கி ஃபைசல், முகைதீன், சொக்கம்பட்டி கபீர், காயல் அப்துல் லத்தீப், மதுக்கூர் அமீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story