பிரான்ஸ் பாவலர் பத்ரிசியா பாப்புராயருக்கு கம்போடியா செம்மொழி பேராயர் விருது

பிரான்ஸ் பாவலர் பத்ரிசியா பாப்புராயருக்கு கம்போடியா செம்மொழி பேராயர் விருது வழங்கப்பட்டது.

பாவலர் பத்ரிசியா பாப்புராயர் : -

பிரான்ஸ் நாட்டின் அரசாங்கப் பணியில் சிறப்பாக செயல்பட்டு பிரான்ஸ் நாட்டின் சிறப்பு விருதை வேலையில் பெற்றவர். இதனை Trait d Union என்ற புத்தகத்தில் அச்சிடப்பட்டு எல்லா லைப்ரரியிலும் CD யுடன் பாதுகாக்கப்படுகிறது. பிரான்ஸ் நாட்டில் பொதுநலச் சேவையை செய்து விருதுகள் பெற்றுள்ளார்.

இவர் தமிழ் கலாச்சார சங்கம் மெலூன் பிரான்ஸ் செயலாளர், பிரான்ஸ் கம்பன் கழகத்தில் படித்து ""பாவலர் " பட்டம் பெற்ற இவர் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (அரசு பதிவு)உலகக் கவிஞர்கள் தமிழ்க் கலை இலக்கிய ஆய்வு மையத்தில் நடந்த கவிதைப் போட்டியில்."" கவிப்பேரொளி"" -குறளரசு""என்ற இரு விருது, புதுவை கம்பன் கழகத்தின் "வாழ்நாள் "உறுப்பினராக உள்ள இவரது கவிதைகள் "குறளின் குரல்" என்ற புத்தகத்தில் வள்ளலார் இடம் பெற்று, முத்தமிழ் பேரவையின் அயலகத் தூதர், தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சியின் ஒருங்கிணைப்பாளர் என பல பொறுப்புகளை பெற்றுள்ளார். புத்தகங்களிலும்,பத்திரிகைகளிலும் கதை, கவிதை, கட்டுரை, பயணக் கட்டுரை எழுதும் இவர் "எனையாளும் கவிதையே" என்ற கவிதை நூலை இந்தியாவில் பாண்டிச்சேரியில் 2022 ல் சிறப்பான முறையில் வெளியிட்டார்.

பிரான்சு சங்கத் தமிழ் இலக்கியப் பூங்கா நடத்த மகாகவி பாரதி விழா 100 நாள் உலக சாதனை சான்றிதழ் நிகழ்ச்சித் தொடரில் 78 ஆம் நிகழ்வு பல்சுவை அரங்கம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பிரான்ஸ் நாட்டு அயலக தூதர் பாவலர் பத்ரிசியா பாப்புராயர் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக (தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சி, சதஇபூ அயலகத் தூதுவர்-அபுதாபி) கவிஞர் கிண்டல். கீதா ஸ்ரீராம் சிறப்புரையாற்றினார். நீலகண்டத்தமிழன் வரவேற்புரை ஆற்றினார்.

இந்நிகழ்ச்சியில் கம்போடியா நாடு செம்மொழி பேராயர் விருது பெற்றார். முன்னதாக கடந்த ஆண்டு 2023 ல் மார்ச் மாதம் மலேசியா நாட்டில் "முத்தமிழ் அரசி" விருதும் பெற்று சிறப்பு சேர்த்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் ரீயூனியன் நாடு இராமகிருஷ்ணன், மோரிஸ் தீவு தமிழ் ஆசிரியை உமா அழகிரி, திண்டுக்கல் பிலிப் சுதாகர், பிரான்சு இளம் முனைவர் சுஜித் குமார், பிரான்சு செல்வி லட்சணா (நடனம்), கம்போடியா முனைவர் தாமரை ஸ்ரீனிவாசன், பிரான்சு பாடகி உமாராவ், கவிஞர் ருவியே, கவிஞர் ஓச்.இராமலிங்கம், பிரான்சு செல்வி ஏஞ்சலினா, பிரான்சு செல்வி ஹேமா லோத்தி, பிரான்சு செல்வன் தனிஸ்லாஸ் லோத்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story