சிவகங்கை மாவட்டத்தில் வேதியியல் துறை சார்பாக வேதியியல் கருத்தரங்கம்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, வேதியியல் துறை சார்பாக வேதியியல் கருத்தரங்கம்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, வேதியியல் துறை சார்பாக "From Astrochemistry to Supramolecular Chemistry" என்னும் தலைப்பில் வேதியியல் கருத்தரங்கம் நடைபெற்றது. வேதியியல் துறை இணைப் பேராசிரியர் முனைவர் கே.சுல்த்தான் செய்யது இப்ராஹிம் வரவேற்றார். கல்லூரி முதல்வர் S.E.A.ஜபருல்லாகான் தலைமையுரையாற்றினார். காரைக்குடி, அழகப்பா செட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி, உதவிப் பேராசிரியர் K.T.லோகநாதன் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக அமெரிக்கா, சான் டிகோ ஸ்டேட் பல்கலைக்கழகம், உதவிப் பேராசிரியர் முனைவர் T.S.வெங்கடேசன் சிறப்புரையாற்றினார். நிகழ்வில் கல்லூரி ஆட்சிக்குழு செயலர் V.M.ஜபருல்லாகான், சுயநிதி பாடப்பிரிவு இயக்குனர் முனைவர் A.சபினுல்லாஹ்கான், டாக்டர் சாகிர் உசேன், கல்வியியல் கல்லூரி முதல்வர் M.M.முஹம்மது முஸ்தபா, இயற்பியல் துறைத்தலைவர் முனைவர் S.முஸ்தாக் அகமதுகான் மற்றும் உதவிப் பேராசிரியை A.ரேவதி உள்ளிட்ட பேராசிரியர்கள், துறை சார் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இறுதியாக உதவிப் பேராசிரியை முனைவர் A.அப்ரோஸ் நன்றி கூறினார்.


Tags

Read MoreRead Less
Next Story