துபாயில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா

துபாயில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா

துபாயில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா

துபாயில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா

தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் 71 வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம் துபாய் "லேன்ட்மார்க் ஹோட்டல் பனியாஸ் ஸ்கொயர்" வளாகத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. அயலக தமிழர் வாரிய உறுப்பினரும்,அமீரக திமுக பொறுப்பாளருமான எஸ்.எஸ்.மீரான் ஏற்பாட்டில் நடந்த இந்நிகழ்ச்சியை ஏஜிஎம் பைரோஸ்கான் தொகுத்து வழங்கினார்.

கழக மூத்த முன்னோடி , அமீரக எழுத்தாளர் குழுமத்தின் தலைவர் ஆசீஃப் மீரான் தலைமை தாங்கினார். இந்த கொண்டாட்டத்தில் அமீரக காயிதே மில்லத் பேரவையின் ஹமீது ரஹ்மான், கவிஞர் சசிக்குமார், திராவிட இயக்க சிந்தனையாளர் பிலால் அலியார், தமிழ்நாடு அரசின் பூங்குன்றனார் விருது பெற்ற எழுத்தாளர் ஜெஸிலா பானு,திரிகூடபுரம் முகம்மது முஸ்தபா. இர்ஷாத், பருத்தி இக்பால், இஞ்சினியர் பாலா, இளமுருகன், தாரிக், மணிவேல், பாண்டியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் அஹமது கபீர், பாலா, உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற பாலா, பாருக், கொரடாசேரி ஜெகபர் அலி, அன்வர், இஸ்மாயில், மச்சேந்திரன், வல்லரசு உள்ளிட்ட ஏராளாமான் அமீரக திமுகவினர் கலந்து கொண்டனர். பின்னர் கேக் வெட்டி தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இறுதியாக பிளாக் துளிப் செந்தில் நன்றி கூறினார்.

Tags

Read MoreRead Less
Next Story