துபாயில் கலந்துரையாடல் - மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு

மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி குவைத்தில் மனிதநேய கலாச்சாரப் பேரவை (MKP) நடத்திய குவைத் தமிழர் எழுச்சி மாநாட்டில் பங்கேற்றவிட்டு, தாயகம் திரும்பும் வழியில் இருநாள் பயணமாக துபாய் வருகை தந்தார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் மனிதநேய கலாச்சாரப் பேரவை நிர்வாகிகள், செயல்பாட்டாளர்கள் பங்கேற்ற 'மு.தமிமுன் அன்சாரியுடன் - சாயுங்காலத்தில் ஒரு தேனீர் சந்திப்பு ' என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அன்னபூர்ணா உணவக மாடியில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு மண்டல செயலாளர் டாக்டர் அசாலி அகமது தலைமை தாங்கினார், ஹக்கீம் இறை வசனம் ஓதினார். அப்துல் ரெஜாக் வரவேற்புரை ஆற்றினார்.

இதில் துணைப் பொதுச் செயலாளர் ராவுத்தர் ஷா, அமீரக MKP அவைத்தலைவர் மதுக்கூர் அப்துல் காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் கல்வி, சமூகம். இந்திய அரசியல் சூழல் ஆகியன குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். பிறகு ஐக்கிய அரபு அமீரக அரசு சூழலியல் அக்கறையுடன் 2024 ஆம் ஆண்டை நிலைத்தன்மை (Sustainability ) ஆண்டாக அறிவித்திருக்கும் முயற்சியை பாராட்டினார். நிறைவாக மண்டல செயலாளர் அபுல்ஹஸன் நன்றி கூறினார்.

நிகழ்ச்சி குறித்த விபரம் அறிந்த பலர் ஏன் பொது விளம்பரம் செய்யவில்லை? என ஆதங்கப்பட்டனர். குறுகிய கால ஏற்பாடு என்பதாலும், சிறிய இடம் என்பதாலும் பொது விளம்பரம் இன்றி மனிதநேய சொந்தங்களுக்கான நிகழ்ச்சியாக நடத்த வேண்டியதாயிற்று என்பதை கூறினர்.

அடுத்து ஒரு பெரிய நிகழ்ச்சி நடத்த விருப்பதால், அப்போது அனைவருக்குமான பொது அழைப்பு கொடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இன்றைய கலந்துரையாடலில் அமீரக நிர்வாகிகளுடன், துபை, அபுதாபி, அல் அய்ன், ஷார்ஜா, உம்முல் கொய்ன் மாநகர நிர்வாகிகளும், மனிதநேய சொந்தங்களும் பங்கேற்றனர்.

Tags

Next Story