துபாய் சமூக நல ஆர்வலருக்கு விருது

துபாய் சமூக நல ஆர்வலருக்கு விருது

மதுரையில் நடைபெற்ற பன்னாட்டு இலக்கிய முப்பெரும் விழாவில் பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர் இராமகிருஷ்ணன், துபாய் சமூக நல ஆர்வலருமான கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ.முகமது முகைதீனுக்கு பண்பாட்டு கலைச்செம்மல் விருது -2023 வழங்கி, பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

மதுரையில் துபாய் சமூக நல ஆர்வலருக்குவிருது

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பன்னாட்டு இலக்கிய முப்பெரும் விழாவில், சிறந்த சேவைகள் மற்றும் தமிழ் மொழி வளர்ச்சிக்கு தொண்டாற்றிய கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளை நிறுவனரும் துபாய் சமூக நல ஆர்வலருமான கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ. முகமது முகைதீன் பண்பாட்டு கலைச்செம்மல் விருது -2023 பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர் இராமகிருஷ்ணன் இந்த பண்ணாட்டு விருது வழங்கி, பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும் தமிழியல் துறைத் தலைவருமான பேரா.சத்தியமூர்த்தி மற்றும் கனடா, மலேசியா, சிங்கப்பூர், பிரான்ஸ், ஜெர்மனி, இலங்கை, உகண்டா உட்பட10 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தமிழ் ஆர்வலர்கள் முன்னிலை வகித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story