கொச்சி மாரத்தான் போட்டியில் சிறப்பிடம் பெற்ற துபாய் தமிழக வீரர்

கொச்சி மாரத்தான் போட்டியில் சிறப்பிடம் பெற்ற துபாய் தமிழக வீரர்
X
கொச்சி மாரத்தான் போட்டியில் சிறப்பிடம் பெற்ற துபாய் தமிழக வீரர்

கொச்சி நகரில் மாரத்தான் போட்டி நடந்தது. இந்த போட்டியில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் பொதுமக்கள் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த போட்டியில் பங்கேற்க துபாயில் பணிபுரிந்து வரும் நாகர்கோவில் வீரர் செய்யது அலி வருகை புரிந்தார். அவர் 50 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்தார். அவருக்கு விழாக்குழுவினர் பதக்கம் வழங்கி கவுரவித்தனர். துபாயில் இருந்து கொச்சியில் நடந்த மாரத்தான் போட்டியில் சாதனை படைத்த தமிழக வீரருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story