வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் சங்கம் சார்பில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் நல அறக்கட்டளை சார்பில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் நல சங்க அறக்கட்டளை சார்பில் வேலைவாய்ப்பு அறிவித்துள்ளனா். இது குறித்து அவா்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் நலச்சங்கம் சவுதி அரேபியாவில் கடந்த 10 ஆண்டுகளாக சிறப்பான முறையில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இதில் எண்ணற்ற மக்களுக்கு வேலை வாய்ப்பை பெற்று தந்து வருகிறோம். எங்கள் சங்கத்தின் நண்பர்கள் பல்வேறு நாடுகளில் சிறப்பாக செயல்பட்டு கொண்டுள்ளனர். இவ்வாய்ப்பை நண்பர்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு மக்களுக்கு சவுதி அரேபியாவில் வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தர ஒரு பிரத்தியோக வாட்ஸ் அப் குழுமம் ஒன்றையும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலச்சங்க அறக்கட்டளை ஜித்தா மண்டலம் சார்பில் தொடங்கியுள்ளோம். இந்த குழுமத்தில் முக்கிய நோக்கம் வெளிநாடுகளில் சேவை பெற்று தருவதாக கூறி பல மோசடி செய்து வருகிறார்கள். இதனை தடுக்கும் விதமாகவும், போலி ஏஜென்ட்கள் மூலம் பல லட்சக்கணக்கான பணத்தை பறிகொடுத்து ஏமாறுபவா்களை காக்கும் விதமாகவும், இந்த குழுமத்தை உருவாக்கியுள்ளோம். இந்த குழுமத்தில் வெளிநாட்டில் உள்ள வேலைவாய்ப்பு விவரங்களை நேரடியாக அந்தந்த நிறுவனங்களே பதிவு செய்வதினால், தாங்கள் நேரடியாக எவ்வித இடைத்தரகரும் இன்றி விண்ணப்பிக்கலாம். வெளிநாடுகளில் வேலை தேடும் நண்பர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள கியூ.ஆர் கோடு ஸ்கேன் செய்து நேரடியாக வேலைவாய்ப்பினை பெற்றுக் கொள்ளலாம். மேலும் இதுகுறித்த விவரங்களுக்கு வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் நலச்சங்கம் ஜித்தா மண்டல தலைவர் ஜக்கரியா ஷரீஃ அவர்களை 96 65 363 82 19 / 96 65 36 01 27 89 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story