பாத்திமா நாயகியார் மஜ்லிஸ் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி

பாத்திமா நாயகியார்  மஜ்லிஸ் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி

இஃப்தார் நிகழ்ச்சி

ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியில் பாத்திமா நாயகியார் மாலை மஜ்லிஸில் அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் சென்டர் கலாச்சார மையத்தில் சீரும், சிறப்புமாக நடைபெற்றது.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் திருப்புதல்வியார் பாத்திமா(ரலி) அவர்களின் வாழ்வியல் முறைகளை எடுத்தோதும் வண்ணம் அவர்களின் திருகுடும்பத்தில் 34-வது தலைமுறையில் இலங்கையில் உதித்த அஸ்ஸெய்யித் கலீல் அவ்ன் மௌலானா கத்தஸ்ஸல்லாஹு ஸிர்ரூஹூள் அழிம் அவர்களின் திருக்கரங்களால் எழுதப்பட்ட "பாத்திமா நாயகியார் மாலை" எனும் புகழ்மாலை அபுதாபி வாழ் தமிழ் இஸ்லாமிய பெருமக்களால் கூடி ஓதப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில்சங்கைமிகு மௌலானாமார்கள் முன்னிலை வகிக்க, ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் சர்வதேச தலைவர் ஹாஜி முனைவர் A.P.ஷஹாப்தீன் தலைமை வகிக்க அய்மான் சங்கத்தின் தலைவர் கீழை ஜமாலுத்தீன், துணைத்தலைவர்கள், நிர்வாக செயலாளர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் அபுதாபி ஜமாஅத் உலமா சபையின் தலைவர் உள்ளிட்ட அங்கத்தினர்கள், மௌலித் கமிட்டியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், தமிழகத்தைச் சார்ந்த பல ஊர்களின் ஜமாஅத்தினர்கள் என பெருந்திரளான மக்கள் மேற்பட்டவர்கள், கலந்து கொண்டார்கள்.

இந்நிகழ்வின் தொடர்ச்சியாக திருவாவடுதுறை இஞ்சினியர் ஜூபைர் அனைவரையும் வரவேற்க, திருமுல்லைவாசல் சங்கைமிகு ஸெய்யித் அலி மௌலானா அவர்கள் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து காயல் ஸாஹூல் ஹமீத் பாத்திமா நாயகியார் அவர்களின் பெயரில் சிறப்பு பாடலுக்கு பிறகு காயல் மௌலவி முத்து அஹ்மது ஆலிம் அவர்களால் சிறப்பு துஆவும் ஓதப்பட்டு, நோன்பு திறக்கும் (இஃப்தார்) நிகழ்வு மிகச்சிறப்பாக நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் தப்ரூக் எனும் சிறப்பு உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அமீரக ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் அபுதாபி உறுப்பினர்கள் மிகச்சிறப்பாக செய்திருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story