கனடாவில் வேலை வாங்கி தருவதாக மோசடி - நடவடிக்கை எடுக்க அமைச்சாிடம் மனு

கனடாவில் வேலை வாங்கி தருவதாக ரூ. 1 கோடி மோசடி - நடவடிக்கை எடுக்க அமைச்சா் செஞ்சி மஸ்தானிடம் மனு அளித்தனா்

கனடாவில் வேலை வாங்கி தருவதாக ரூ. 1 கோடி மோசடி செய்துள்ள போலி ஏஜண்டுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி வெளிநாடு வாழ் தமிழர்கள் நல சங்கம் அறக்கட்டளை நிர்வாகிகள் அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் பாதிக்கப்பட்ட மக்களுடன் சென்று மனு கொடுத்தனா். கனடா நாட்டிற்கு வேலை வாங்கி தருவதாக சுமார் 50 பேரிடம் தலா ஒரு லட்சம் முதல் 2 லட்சம் ரூபாய் வரை பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றிய மலேசிய நாட்டில் வசிக்கும் பெண் ஏஜென்ட் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை ஒருங்கிணைத்து வெளிநாடு வாழ் தமிழர்கள் நல அறக்கட்டளை மற்றும் நலச் சங்கம் சார்பில் மாநில பொதுச் செயலாளர் கே.வி.கண்ணன் மற்றும் மாநில துணைத் தலைவர் எல்.கே.எம்.நூருல்லா ஆகியோர் ஒருங்கிணைப்பில் ஊடகப் பிரிவு தமிழ் மதியழகன், மாவட்ட நிர்வாகி கே.ஜி.பி.மணிகண்டன் ஆகியோரின் முன்னிலையில் செஞ்சியில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தானிடம் மனு அளித்து முறையிடப்பட்டது. மேலும் போலி ஏஜென்ட் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மோசடி செய்யப்பட்ட பணத்தை சட்ட ரீதியில் மீட்டு தர உதவிடுவதாகவும் அமைச்சா் கே.எஸ்.செஞ்சி மஸ்தான் நம்பிக்கை தெரிவித்தார். இந்நிகழ்வில் கலந்து கொண்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சரின் துணைவியார் அனைவருக்கும் உணவளித்து உபசரித்தார்.

Tags

Next Story