பஹ்ரைன் 52 வது தேசிய தினத்தை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்

பஹ்ரைன் 52 வது தேசிய தினத்தை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்

இலவச மருத்துவ முகாம்

பஹ்ரைனின் 52 வது தேசிய தினத்தை முன்னிட்டு, அல் ஹிலால் மல்டி ஸ்பெஷாலிட்டி மெடிக்கல் சென்டர்- சல்மாபாத் கிளை மற்றும் வேர்ல்ட் மலையாளி கவுன்சில் பஹ்ரைன் கிளையுடன் இணைந்து, அல் ஹிலால் மல்டிஸ்பெஷாலிட்டி மெடிக்கல் சென்டர் - சல்மாபாத் கிளை வளாகத்தில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. முகாமில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர். பஹ்ரைன் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹசன் ஈத் போக்ம்மாஸ் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். லைட்ஸ் ஆஃப் கைண்ட்னஸ் (சமூக உதவி இயக்கம்), அல் ஹிலால் மல்டிஸ்பெஷாலிட்டி மெடிக்கல் சென்டர் - சல்மாபாத் கிளை மற்றும் வேர்ல்ட் மலையாளி கவுன்சில் பஹ்ரைன் கிளை நிர்வாகிகள் இணைந்து இலவச மருத்துவ முகாம் பணிகளை ஒருங்கிணைத்தனர்.

Tags

Next Story