பஹ்ரைன் இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் (ஐ ஓ சி) சார்பில் இப்தார் நிகழ்ச்சி

பஹ்ரைன் இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் (ஐ ஓ சி) சார்பில் இப்தார் நிகழ்ச்சி

இப்தார் நிகழ்ச்சி 

பஹ்ரைன் இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் (ஐ ஓ சி) தமிழ்நாடு பிரிவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்ச்சி மிகவும் முன்னுதாரணமானது.

இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தமிழ்நாடு பிரிவு, புனித ரம்ஜான் மாதத்தில் உழைக்கும் சகோதரர்களை ஒன்று சேர்த்து தகுதியானவர்களுக்கு நோன்பு உணவை பசித்தோருக்கு விநியோகம் செய்தது.

இதனை விநியோகிப்பதன் மூலம் அதை அறம் சார்ந்த செயலாகக் காண்பதில் மகிழ்ச்சியும் பெருமிதமும் நிலவுவதாக ஐ ஓ சி பஹ்ரைன் அமைப்பின் கீழ் புதிதாக உருவாக்கப்பட்ட ஐ ஓ சி பஹ்ரைன் தமிழ்நாடு பிரிவு நிர்வாகிகள் தெரிவித்தனர்.

பஹ்ரைனில் தூப்லியிலுள்ள தொழிலாளர் குடியிருப்பில் உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டன.

ஐ ஓ சி பஹ்ரைன் தலைவர் முஹம்மது மன்சூர், பொதுச் செயலாளர் பஷீர் அம்பலாயி, முஹம்மது கயாசுல்லா, சந்தோஷ் ஆஸ்டின், தௌஃபீக் அப்துல் காதர், நௌஷாத் ஹுதாதுல் உகையே, இஸ்ரத் சலிம், ஆதில் அகமது சர்வே, அனஸ் ரஹீம் ருக்ஸான் அஹ்மத், தௌஃபிக் அம்மாத், ஜாகிர் அலி, அய்யன் கணேஷ், அஸ்வின் மாதவ், ஜோபின் மேத்யூ, சமூக சேவகர்கள் சையது ஹனீஃப், ஷாஜி பொழியூர், ஐ ஓ சி பஹ்ரைன் தமிழ்நாடு பிரிவு தலைவர் நாயகம் மரியதாஸ், துணைத் தலைவர் சூசை நாயகம், செயலாளர் பிரவின் லாசர், துணைச் செயலாளர் ஜாக்சன் ஜாண், பொருளாளர் சிலுவைதாசன், எஸ்.பிரியன், துணை பொருளாளர் ஜான் ஜோசப் மற்றும் உறுப்பினர்கள் ஜோஸ், ஷைன், மகேஷ் லேசர், மெல்சன், பில்டன், யூசுப் சையத், அப்துல் காதர் ஆகியோர் விநியோகத்தின் போது கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story