துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் ஜமாஅத் சார்பில் நடந்த இஃப்தார் நிகழ்ச்சி

துபாய் நகீல் பகுதியில் உள்ள கார்டன் சிட்டி ஓட்டலில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி அதன் தலைவர் கே. சுல்தான் செய்யது இப்ராகிம் தலைமையில் நடந்தது. அவர் தனது உரையில் ஒவ்வொரு வருடமும் இந்த இப்தார் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஜமாஅத்தினர் அனைவரும் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தாயகத்தில் சமுதாயப் பணிகள் நடக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

பொதுச் செயலாளர் முகம்மது அஸ்லம் வரவேற்புரை நிகழ்த்தினார்.

இந்த நிகழ்ச்சியில் தாயகத்தில் இருந்து வருகை புரிந்துள்ள ஜமாஅத் பிரமுகர் சாகுல் ஹமீது, தகவல் தொழில்நுட்ப மேலாளர் கனி, ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத், சென்னை தர்பார் உணவக உரிமையாளர் இஸ்மாயில் உள்ளிட்டோர் பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் ஆலோசகர்கள் ஜஹாங்கீர், அமீனுதீன், கஸ்ஸாலி, ஜாஹிர், செய்யது அபுதாகிர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பொருளாளர் முகம்மது அனஸ் நன்றியுரை நிகழ்த்தினார்.

Tags

Read MoreRead Less
Next Story