குவைத்தில் பெரியார் கைப்பிடியை தூக்கி முழக்கம் - தமிழர் எழுச்சி மாநாட்டில் உற்சாகம்

குவைத்தில் பெரியார் கைப்பிடியை தூக்கி முழக்கம் - தமிழர் எழுச்சி மாநாட்டில் உற்சாகம்

குவைத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் அயலக பிரிவான மனிதநேய கலாச்சாரப் பேரவை (MKP) சார்பில் குவைத் தமிழர் எழுச்சி மாநாடு நடைபெற்றது. இதில் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி, பேராசிரியர். சுந்தரவள்ளி, ஜீவா டுடே நிறுவனர் தோழர் ஜீவ சகாப்தன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர். இதில் குவைத்தில் செயல்படும் தந்தை பெரியார் நூலகத்தின் காப்பாளர் தோழர். சித்தார்த்தன் அவர்கள் மூவருக்கும் நூல்களை பரிசாக வழங்கினார். அப்போது கைத்தடி ஏந்தி அவர் மேடைக்கு வந்து, இது பெரியார் வைத்திருந்த கைத்தடியை நினைவூட்டுவதற்காக எடுத்து வந்ததாக கூறினார். அப்போது மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி, அதை தூக்கிப்பிடித்து மக்களிடம் காட்ட அரங்கம் கரவொலியால் அதிர்ந்தது. அயலக தமிழர்களிடம் தந்தை பெரியாரின் தாக்கம் எவ்வளவு வலிமையாக ஊடுறுவி உள்ளது என்பதை வெளிக்காட்டுவதாக இச்சம்பவம் அமைந்தது.

Tags

Read MoreRead Less
Next Story