பாரதியார் உலக சாதனை விழா, உலகத் தாய்மொழி சாதனை நாள் தொடக்க விழா
பாரதியார் உலக சாதனை விழா, தமிழ் தொண்டர் விருது, சங்கத் தமிழ் இலக்கியப் பூங்கா கவிஞர் வாலிதாசன் கலை இலக்கியப் பேரவை உலக தாய்மொழி நாள் சாதனை சிறப்பு கவியரங்கம் துவக்க விழா, நூல் வெளியீடு, செம்மொழிச் செல்வம் விருது வழங்குதல் மற்றும் கவியரங்கம் நடைபெற்றது. சங்கத்தமிழ் இலக்கியப் பூங்கா தலைவர் நீலகண்டன் தலைமை தாங்கினார். புதுவை ஆர்.புவனா வரவேற்புரை ஆற்றினார். பிரான்சு சங்கத் தமிழ் இலக்கியப் பூங்கா அயலகத் தூதுவர் பாவலர் பத்ரிசியா பாப்பு, பாவலர் சாவித்திரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பிரான்சிலிருந்து வருகை தந்து சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு இந்திய அஞ்சல் தலை வெளியிட்டு, சங்கத் தமிழ் இலக்கிய பூங்கா அஞ்சல் தலை விருது மற்றும் தமிழ் தொண்டர் விருது வழங்கினா். மேலும் 150 பிள்ளைகளுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாரதியார் விழாவை கொண்டாடினர். கவிஞர் அமிர்தலிங்கம் கங்காதரன், ஆர்.செல்வம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கவிச்செல்வம் கீதா தயாளன், தலைமையில் 30 க்கும் மேற்பட்ட கவிஞர்கள் கலந்து கொண்டு தங்களது கவிதைகளை வாசித்தனர். கவிஞர் பைரவி ஒருங்கிணைப்பு செய்தார். இறுதியாக வாணிதாசன் முருகன் நன்றி கூறினார்.