மஸ்கட் இந்திய தூதரகத்தில் இந்திய தொழிலாளர் குறைதீர்க்கும் நிகழ்ச்சி

மஸ்கட் இந்திய தூதரகத்தில் இந்திய தொழிலாளர் குறைதீர்க்கும் நிகழ்ச்சி

மஸ்கட் இந்திய தூதரகத்தில் தொழிலாளர் குறைதீர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் ஒவ்வொரு மாதமும் தொழிலாளர்களது குறைதீர்க்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு இந்திய தூதர் அமித் நாரங் தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் தொழிலாளர்கள் தங்களுக்கு முறையாக சம்பளம் வழங்கப்படாதது, பாஸ்போர்ட் தொடர்பான பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக நேரில் வந்து குறைகளை தெரிவித்தனர். அதற்கு தூதரக அதிகாரிகள் தேவையான ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்கினர். இந்த முகாமில் நேரில் பங்கேற்க முடியாதவர்கள் இந்திய தூதரகத்தின் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு ஆலோசனைகளை பெற்றனர். இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story