குவைத்தில் தமிழர்கள் நல அறக்கட்டளை சார்பில் இந்திய குடியரசு தின விழா

குவைத்தில் வெளிநாடு வாழ் தமிழர்கள் நல அறக்கட்டளை நலச்சங்கம் சார்பில் 75 ஆம் ஆண்டு இந்திய குடியரசு தின விழா

இந்தியாவின் 75வது குடியரசு தினத்தில் குவைத் இந்தியதூதர் டாக்டர்ஆதர்ஷ் ஸ்வைகா தேசத் தந்தை மகாத்மா காந்திக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, இந்தியாவின் 75 வது குடியரசு தினத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் கொடியேற்றி உரை நிகழ்த்தினார். இந்த பெருமை மிக்க சந்தர்ப்பத்தில், குவைத்தில் உள்ள ஒவ்வொரு இந்தியருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்தார். அதோடு மட்டுமின்றி அவர்களின் தொடர்ச்சியான வெற்றி, மகிழ்ச்சி மற்றும் நல்ல ஆரோக்கியமாக வாழவும் பிரார்த்திப்பதாக தெரிவித்தார்.

இந்திய தூதர் அவர்கள் அதுமட்டுமின்றி வருகை தந்த மக்கள் பல ஆயிரம் பேருடன் பல மணி நேரம் நின்று முக மலர்ச்சியுடன் புகைப்படம் எடுத்து கொண்டார். மேலும் இந்திய தூதரகம் குவைத்தில் பணிபுரியும் மக்கள் நலன் காக்க முதன்மையாக செயல்படுவோம் எனவும் தெரிவித்தார். இந்த சிறப்புமிகு நிகழ்வில் வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் நலச்சங்கம் குவைத் நிர்வாகிகள் மகளிர் அணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags

Next Story