சவுதி அரேபியாவில் அயலக தமிழர் அடையாள அட்டை பதிவு செய்வதில் இந்தியன்ஸ் வெல்பர் ஃபோரம் சாதனை
சவுதி அரேபியா முழுவதும் ஒரே நாளில் பல மண்டலங்களில் அயலக தமிழர் அடையாள அட்டை பதிவு செய்யும் முகாமை நடத்தி சாதனை படைத்துள்ளது இந்தியன்ஸ் வெல்பர் ஃபோரம்.. ஒரு அமைப்பாய் திரண்டால் அனைத்தும் சாத்தியம் என்பதை இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் மீண்டும் நிரூபித்துள்ளது. தலைநகர் ரியாத்தில் ரியாத் மண்டல அலுவலகத்தில் முதல் முகாமை நடத்தி அதனைத் தொடர்ந்து தொலைபேசி வழியாக பல்வேறு மக்களுக்கு அடையாள அட்டையை பெற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக கடந்த வியாழன் வெள்ளி சனி என மூன்று நாட்களிலும் நியூ செனையா கிளையின் சார்பாக கேம்ப கேம்ப்ஆக நேரடியாக சென்று நூற்றுக்கணக்கான தமிழர்களின் அயலக தமிழர் நலவாரிய உறுப்பினர் அட்டை பெறுவதற்கு வழி வகுத்துக் கொண்டுள்ளது இந்தியன் வெல்ஃபர் பாரம் ரியாத் மத்திய மண்டலம் ..
சவுதி அரேபியாவின் விவசாய தலைநகரமாக விளங்கும் வடக்கு அல் கசிம் மண்டலம் சார்பாக அயலகத் தமிழர் அடையாள அட்டையை அதிகமாக பெற்றுக் கொடுத்த மண்டலம் எனும் பெயர் வாங்கும் வகையில் அனைத்து இஸ்லாமிய அழைப்பு மையங்களிலும் கேம்ப்களிலும் தனிநபர் அறைகளிலும் தமிழர்களை அழைத்து இதுவரை ஐந்துக்கும் மேற்பட்ட முகாம்களை நடத்தி மிக குறைவான சம்பளங்களிலே வேலை செய்யும் இந்த அயலகத் தமிழர்களின் திட்டத்தால் அதிக பயன்பெறும் மக்களுக்கு அடையாள அட்டையை பெற்றுக் கொடுத்து கொண்டுள்ளது வடக்கு மண்டல இந்தியன்ஸ் வெல்பார் ஃபோரம்..
சவுதி அரேபியாவின் இரண்டாம் தலைநகரான ஜித்தாவில் மேற்கு மண்டலம் இந்தியன்ஸ் வெல்பர் ஃபோரம் சார்பாக மூன்றுக்கும் மேற்பட்ட முகாம்களை அதிக மக்கள் கலந்து கொள்ளும் வகையில் மக்கா உள்ளிட்ட நகரங்களில் ஹோட்டல்களிலும் மருத்துவமனைகளிலும் கேம்புகளில் நடத்தி அயலகத் தமிழர் நலவாரிய அடையாள அட்டை பெற்றுக் கொடுத்து வருகிறது மேற்கு மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் பாரம். சவுதி அரேபியாவின் பொருளாதார கேந்திரமாய் விளங்கும் யான்பு மண்டலம் சார்பாக நேற்றைய தினம் முதல் தமிழர்களை அழைத்து அயலக அடையாள அட்டை பெற்றுக் கொடுத்து தொடர்ச்சியாக கட்டணமில்லா வாய்ப்பை பயன்படுத்தும் வகையில் முகாம்களை மிகச் சிறப்பாக நடத்திக் கொண்டுள்ளது யான்பு மண்டல இந்தியன்ஸ் வெல்பர் ஃபோரம்..
வரலாற்று சிறப்புமிக்க புனித மண்ணான மதினாவில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்தியன்ஸ் வெல்பர் பாரம் அயலகத் தமிழர் அடையாள அட்டை பதிவு செய்யும் முகாமை நடத்தி களமாடி உள்ளது. மிகுந்த நெருக்கடி மிகுந்த அப்பெருநகரில் ஒரு வணிக நிறுவனத்தில் வைத்து மிகச் சிறப்பான முகாமை நடத்தி புனித மண்ணில் பணியாற்றும் பல தமிழர்களுக்கு அயலகத் தமிழர் அடையாள அட்டை பெறுவதிலே மிகச் சிறப்பான பணியை செய்திருக்கிறது இந்தியன்ஸ் வெல்பர் பாரம் மதீனா அமைப்புக்குழு. காதும் காதும் வைத்தார் போல் பல்வேறுபட்ட சமூகப் பணியை சத்தம் இல்லாமல் செய்யும் சவுதி அரேபியாவின் மிக முக்கிய பொருளாதாரம் கேந்திரமான தமாம் கிழக்கு மண்டலம் சார்பாக அங்கு இருக்கும் தமிழர்களுக்கு அயலகத் தமிழர் அடையாள அட்டையை பெறுவதற்கான வழிகாட்டுதல்களையும் கொடுத்து சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கிறது கிழக்கு மண்டல இந்தியன்ஸ் வெல்பர் ஃபோரம்.
நாம் செல்லும் வரை தான் அது வெற்றிடம் நாம் சென்ற பிறகு இறைவனின் அருளால் அது வெற்றி இடம் என்று சொல்லும் வகையில் தமிழக அரசு அலயகத் தமிழர்களின் மீது கவனம் திசை திருப்பியதில் இருந்து இருந்து இந்த அடையாள அட்டை பெறுவது வரை பல்வேறுபட்ட பணியை முயற்சியை செய்து கொண்டுள்ளது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இவற்றின் அயலக பிரிவான இந்தியன்ஸ் வெல்பர் பாரம் இந்த ஒப்பற்ற சேவைக்கு உழைத்த உதவிய அனைத்து சொந்தங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளும் அகம் கனிந்த பாராட்டுக்களும் தொடர்ந்து இது போன்ற மக்கள் சேவை தளத்தில் ஆழமாக ஈடுபட்டு இப்பேர் அமைப்பை பட்டி தொட்டி எல்லாம் பரப்பி வளமாக்கி அனைத்து சமுதாயத்தையும் பலப்படுத்துமாறும் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்..
மேலும் ஆகஸ்ட் 15 வரை உள்ள கட்டணமில்லா காலக்கெடுவை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கவும் மேலும் 55 வயது என்ற வயது வரம்பை 60 வயது வரை உயர்த்தி தருமாறும் உரிய அமைச்சரிடம் பேசுவதற்கான வேலையையும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் முனைவர் ஜவாஹிருல்லா ஈடுபட்டுள்ளார்.