ஷார்ஜாவில் நடந்த சர்வதேச கல்விக் கண்காட்சி

ஷார்ஜாவில் நடந்த சர்வதேச கல்விக் கண்காட்சி

கல்விக் கண்காட்சி 

ஷார்ஜா எக்ஸ்போ செண்டரில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச கல்விக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு 19 வது ஆண்டாக இந்த கண்காட்சி நடைபெற்றது.

இந்த கண்காட்சியில் ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா, இங்கிலாந்து, மலேஷியா, சைப்ரஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் இதில் பங்கேற்றன. குறிப்பாக தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உயர் கல்வி நிறுவனங்கள் ஆர்வத்துடன் பங்கேற்றன.

இந்த கண்காட்சியை பள்ளிக்கூட மாணவ, மாணவியருடன் அவர்களது பெற்றோர்களும் பார்வையிட்டு விபரங்களை சேகரித்தனர். இந்த கண்காட்சி தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது என அவர்கள் தெரிவித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story