ஷார்ஜாவில் சர்வதேச உலக ஆராய்ச்சி பேரவை முப்பெரும் விழா

ஷார்ஜாவில் சர்வதேச உலக ஆராய்ச்சி பேரவை முப்பெரும் விழா

ஷார்ஜா ஐ.டி.எம்.சர்வதேச பல்கலைக்கழகத்தில் உலக ஆராய்ச்சி கருத்தரங்க பேரவையின் சார்பில் சர்வதேச கல்வி கருத்தரங்கு, நூல் வெளியீடு – விருது வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் கூடிய முப்பெரும் விழா நடந்தது. இந்த கருத்தரங்கானது ‘நிலையான வணிக வளர்ச்சி உலகளாவிய சூழ்நிலையில் நடவடிக்கைகள் மற்றும் தீர்வுகள்“ என்ற தலைப்பில் நடைபெற்றது. டாக்டர் பேராசிரியர் கைலாஷ் ஜெ.கரண்டே தலைமை வகித்தார். கருத்தரங்க இயக்குநர் பேராசிரியர் டாக்டர் பிரகாஷ் திவாகரன் வரவேற்புரை ஆற்றினார். டாக்டர் அமிதாப் உபாத்யா தொடக்கவுரை நிகழ்த்தினார். பிரியந்தா நீலவாலா மற்றும் சீகுல் குழுமத்தின் தலைவர் டாக்டர் சுரேஷ்குமார் மதுசூதனன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். டாக்டர் இளங்கோ ரெங்கசாமி சிறப்புரை ஆற்றினார்.

அதனைத் தொடர்ந்து நடந்த பல்வேறு அமர்வுகளில் கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ.முகம்மது முகைதீன் நிலைத்தன்மை குறித்தும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தொழில்முனைவோர் கல்வி மற்றும் வர்த்தகக் கல்வித்துறை தலைவர் பேராசிரியர் முனைவர் எம். சிவகுமார், டேராடூன் பேராசிரியர் டாக்டர் பி. பாவனா ராவ், சமூக ஆர்வலர் சான்யோ டாப்னே, பேராசிரியர் டாக்டர் முகம்மது நகிபுர் ரஹ்மான் உள்ளிட்டோர் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர். சிறந்த தன் முனைப்பு பேச்சாளருக்கான விருதை முனைவர் ஆ.முகம்மது முகைதீன், சிறந்த வர்த்தக பிரமுகருக்கான விருது ராஜா, சிறந்த கல்வியாளருக்கான விருது சொறிப்பாரைப்பட்டி ஜாஹிர் ஹுசைன், பைன் ஆர்ட் துறையில் சிறந்து விளங்கி வருவதற்கான விருது பகவதி ரவி, சிறந்த சமூகப் பணியாளருக்கான விருது முதுவை ஹிதாயத், நாகர்கோவில் பிரவீன் மற்றும் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

டாக்டர் பாவனா ராவ் எழுதிய சட்டம் தொடர்பான நூல், தமிழத்தின் தோப்புத்துறையை சேர்ந்த அப்துல் ஜப்பார் முஹம்மது நூர்தீன் ஒன்பதாம் வகுப்பு மாணவர் எழுதிய எம்.ஏ.ஜே. மோட்டிவேட்ஸ் என்ற தன்முனைப்பு தொடர்பான ஆங்கில நூலும் இந்த கருத்தரங்கில் வெளியிடப்பட்டது. கருத்தரங்கில் இந்தியா, சவுதி அரேபியா, பங்களாதேஷ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து கல்வியாளர்கள் பங்கேற்றனர். மணமேல்குடி அம்ஜத் கான், வாணியம்பாடி சாஜித் பாஷா உள்ளிட்டோர் இந்த கருத்தரங்கு சிறப்புடன் நடைபெற தன்னார்வலர்களுக்கான குழு பணியை மேற்கொண்டனர். இறுதியாக முதுவை ஹிதாயத் நன்றி கூறினார்.

Tags

Read MoreRead Less
Next Story