இலங்கையில் தமிழ்நாடு கவிஞர் ஹிதாயத்துல்லா நூல் அறிமுகம்.

இலங்கையில் துயர் துடைப்போம் அமைப்பின் ஏற்பாட்டில் தமிழ்நாடு கவிஞர் ஹிதாயத்துல்லா நூல் அறிமுகம்.

துயர்துடைப்போம் அமைப்பின் பிரதேச கல்வியை வளர்ப்போம் எனும் தொனிப்பொருளில் அதன் தலைவர் தேசமானி ஆதம் மன்சூர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வலய கல்வி உதவி பணிப்பாளர் டாக்டர் ஹனிபா இஸ்மாயிலுக்கு இலக்கிய ஆர்வலரும், ஷார்ஜா ஐ.டி.எம். சர்வதேச பல்கலைக்கழகத்தின் சட்டப்படிப்பு மாணவருமான அஹில் சுபையிர் மௌலவி அவர்களால் இளையான்குடி கவிஞர் தமிழ்மாமணி மு.ஹிதாயத்துல்லா எழுதிய ‘வஹியாய் வந்த வசந்தம்’ என்ற கவிதை நூல் வழங்கி கௌரவிக்கபட்டது. இலங்கை கலாநிதி ஹனிபா இஸ்மாயில் நூலாசிரியர் கவிஞர் மு. ஹிதாயத்துல்லாவின் இலக்கிய பணிகளுக்கு தனது பாராட்டு களையும் பகிர்ந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story