உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள் திட்ட அறிமுக நூல் வெளியீட்டு விழா

உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள் திட்ட அறிமுக நூல் வெளியீட்டு விழா

 நூல் வெளியீட்டு விழா 

கடந்த ஆறு ஆண்டுகளாக தேடித் தொகுத்த "உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள்" என்ற திட்டத்தின் நூலாக " Thirukkural Translations in World Languages" என்ற நூல் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.

சென்னை, ராயப்பேட்டை , இந்திய அலுவலர் சங்கக் கட்டிட வளாகத்தில் உள்ள திருவள்ளுவர் அரங்கத்தில் திருக்குறள் ஐம்பெரும் விழாவில் "Thirukkral Translations in world Languages " ஆங்கில மொழிபெயர்ப்பு வண்ண நூலினை 209 பக்கங்களில் வெளியிடப்பட்டது.

நீதியரசர் அரங்க. மகாதேவன் வெளியிட, செம்மொழி ஆய்வு நிறுவனத்தின் துணைத்தலைவர், மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் . இ சுந்தரமூர்த்தி, தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ஔவை அருள், மேனாள் துணைவேந்தர் முனைவர் சி.சுப்பிரமணியம், வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கலைமாமணி டாக்டர் வி.ஜி. சந்தோசம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

தமிழில் ஆய்வு செய்ய முடியாத பன்னாட்டுத் தலைப்பாக இருந்த உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகளைக் கடந்த ஆறு ஆண்டுகளாகக் குழுவாக ஆராய்ந்து 29 இந்திய மொழிகள் மற்றும் 29 உலக மொழிகள் என மொத்தம் 58 மொழிகளில் திருக்குறள் இதுவரை மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்ற தகவலை இந்நூலின் வழியாக உலகத் தமிழர்களுக்குத் தெரிவிப்பதுடன் , யுனெஸ்கோ, ஐக்கிய நாடுகள் சபை, இவ்வமைப்புகளில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் , உலக நாடுகளின் ஒவ்வொரு நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் என்ற விரிவான பார்வையில் ஆய்வு மேற்கொண்டு அவற்றைத் தெளிவாகப் பட்டியலிட்டு இன்னும் எத்தனை மொழிகளில் மொழி பெயர்க்க வேண்டும் என்ற துல்லியமான தகவலை இந்த ஆய்வு முடிவு இந்நூலின் வழியாக அறிவிக்கிறது.

Highlights of Thirukkural Translations

Total number of translated languages: 58

Indian Languages: 29

Other World Languages: 29

Translations into UN official languages:

Translations have been completed for all the six official UN languages-Arabic, Chinese, English, French, Russian and Spanish.

Translations into UNESCO official languages:

Thirukkural has been translated into nine out of 10 official languages of UNESCO, Portuguese is the only exception.

Global reach of Thirukkural translations:

Number of countries with translations in at least one of their official languages: 151

Countries that need a translations in at least one of their official languages: 83

Indian language translations planned by CICT: 59

Other world language translations planned by CICT: 7

UNESCO member countries perspective:

UNESCO member countries with translation in at least one of their official languages: 136

UNESCO member countries yet to see a translation in at least one of their official languages: 45

இந்நூலை : www.estore.valaitamil.com என்ற இணையதளம் வாயிலாகப் பெறலாம்.

Tags

Read MoreRead Less
Next Story