துபாயில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் ரத்ததான முகாம்

துபாய் குவைத் மருத்துவமனை வளாகத்தில் உள்ள ரத்த வங்கியில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க அமீரகப் பிரிவின் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.

இந்த முகாமுக்கு முன்னாள் மாணவர் சங்க தலைவர் பூதமங்கலம் அல்ஹாஜ் முஹம்மது ஜியாவுதின் தலைமை வகித்தார்.

பொதுச் செயலாளர் திண்டுக்கல் ஜமால் முஹைதீன் வரவேற்றார்.

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் ஓய்வு பெற்ற துணை முதல்வர் பீ.மு.மன்சூர், முஹிப்புல் உலமா ஏ. முஹம்மது மஃஹ்ரூப், கீழக்கரை உஃபூர் காக்கா, கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ.முகம்மது முகைதீன் அமீரக தமிழ் தொழில்முனைவோர் மற்றும் திறனாளர் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் பால் பிரபாகர், இந்தியர் நலவாழ்வு பேரவையின் துணைத் தலைவர் பரமக்குடி ஏ.எஸ். இப்ராஹிம், சொறிப்பாரைப்பட்டி ஜாஹிர் ஹுசைன், ஜெர்மனி தமிழருவி வானொலியின் ஒருங்கிணைப்பாளர் பாண்டிச்சேரி ரகுபதி, தஞ்சாவூர் ஜாஹிர் ஹுசைன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் ரத்ததானம் செய்தனர். இந்த பணியில் தங்களது பங்களிப்பை வழங்கிய அனைவருக்கும் பாராட்டு தெரிவித்தனர்.

மேலும் மருத்துவமனை நிர்வாகத்தினருக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. துணைத் தலைவர் முதுவை ஹிதாயத் நன்றி கூறினார்.

முகாமுக்கான ஏற்பாடுகளை கட்டுமாவடி பைசல் ரஹ்மான், தஞ்சை மன்னர் மன்னன், மரைக்காயர் பட்டினம் ஜாபர் சாதிக், மதுக்கூர் ஹிதாயத்துல்லா, பேரளம் நவாசுதீன், மதுரை முஹம்மது கனி, மணமேல்குடி அம்ஜத் கான் உள்ளிட்ட முன்னாள் மாணவர்களைக் கொண்ட குழுவினர் விழா சிறக்க சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

குறிப்பாக அத்திக்கடை ஜமாஅத்தை சேர்ந்த குழுவினர் இந்த முகாமில் பங்கேற்க சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

இந்த முகாமில் 50 க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்ய ஆர்வமுடன் பங்கேற்றனர். மேலும் முகாம் சிறப்புடன் நடைபெற கில்லி 106.5 எப். எம்., ஆர்.ஜே. அஞ்சனா உள்ளிட்ட பல்வேறு சமூக வலைத்தள பிரபலங்கள் தேவையான ஒத்துழைப்பை வழங்கினர்.

Tags

Read MoreRead Less
Next Story