துபாயில் கழிவுப் பொருளிலிருந்து கலைப் பொருட்களை தயாரித்த மாணவர்களுக்கு பாராட்டு
துபாயில் கழிவுப் பொருளிலிருந்து கலைப் பொருட்களை தயாரித்த மாணவர்களுக்கு அமீரக சுற்றுச்சூழல் குழுமம் பாராட்டி கௌரவித்துள்ளது.
அமீரக சுற்றுச்சூழல் குழுமம் மாணவ, மாணவியர் மத்தியில் உபயோகப்படுத்த முடியாத பொருட்களின் மூலம் கலைப்பொருட்களை ஏற்படுத்தும் போட்டியை நடத்தி வருகிறது.
இந்த போட்டியில் அமீரகம் முழுவதும் உள்ள பள்ளிக்கூட மாணவ, மாணவியர் மூன்று பிரிவுகளில் பங்கேற்க வாய்ப்பை வழங்கி வருகிறது. இதில் சிறப்பான முறையில் கலைப்பொருட்களை வடிவமைத்தவர்களுக்கு பரிசுப்பொருட்கள் மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்கி கௌரவித்தது. அமீரக சுற்றுசூழல் குழுமத்தின் தலைவர் ஹபிபா அல் மராசி பரிசுகளை வழங்கி பாராட்டினார். சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மாணவ, மாணவியரின் சிறப்பான பங்களிப்பிற்கு வாழ்த்து தெரிவித்தார்.
Next Story