மாலத்தீவு இளைஞா்கள் இந்திய தூதா்கள் மூலம் தாயகம் திரும்பினா்

மாலத்தீவு இளைஞா்கள் இந்திய தூதா்கள் மூலம் தாயகம் திரும்பினா்

மாலத்தீவக்கு மீன்பிடி தொழில் செய்து வந்த இளைஞா்கள் இந்திய தூதா்கள் மூலம் தாயகம் திரும்பினா்

மாலத்தீவில் மீன்பிடி தொழில் செய்து வந்த இளைஞா்கள் இந்திய தூதா்கள் மூலம் தாயகம் திரும்பினா்

லட்சத்தீவைச் சேர்ந்த 6 நண்பர்கள் ஏஜன்சிகள் மூலம் பணம் செலுத்தி மீன்பிடி தொழிலுக்காக மாலத்தீவில் உள்ள Ga.Villingili என்னும் தீவில் வேலைக்கு வந்தனர். கடந்த 3 மாதமாக வேலை செய்த அவா்களுக்கு சம்பளம் கொடுக்கப்படவில்லை. போன் ரீசார்ஜ் செய்யக்கூட பணம் தரவில்லை. இந்நிலையில் முதலாளியிடம் தங்களை ஊருக்கு அனுப்பிவிடுங்கள் என கேட்டுள்ளனர். ஆனால் அந்த முதலாளி மறுத்ததோடு கண்டிப்பாக வேலை செய்து தான் ஆகவேண்டும் என கட்டாயப்படுத்தியுள்ளார்.

சம்பளமில்லாமல் வேலை செய்ய மனமில்லாமல் அவர்கள் அனைவரும் முதலாளியிடம் கூறிவிட்டு மாலிசிட்டிக்கு வந்து இந்திய தூதரகம் சென்றுள்ளனர். பிறகு இம்மிக்கிரேஷன் உள்ளிட்டவற்றை முடித்து White Passport மூலம் தாயகம் அனுப்பி வைக்கபட உள்ளனர்.இதற்காக உதவிகள் செய்த இந்திய தூதரகம் உறுதுணையாக இருந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்தனா். இதற்காக VVTNS மாலத்தீவைச் சார்ந்த ஷேக் சலீம் உள்ளிட்ட நண்பா்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனா். மாலத்தீவு சம்பந்தமாக தங்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டாலோ அல்லது மாலத்தீவில் வேலைவாய்ப்புகள், மாலத்தீவில் வழங்கப்படும் விசா மற்றும் உறுதிக் கடிதம் உண்மையானதா? என்பது பற்றிய விளக்கங்களை அறிந்து செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனா்.

Tags

Next Story