துபாய் முஷ்ரிப் பூங்காவில் சந்திப்பு நிகழ்ச்சி

துபாய் முஷ்ரிப் பூங்காவில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சந்திப்பு நிகழ்ச்சி

துபாய் முஷ்ரிப் பூங்காவில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் வருடாந்திர சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு ஜமாஅத் தலைவர் எம். சுல்தான் செய்யது இப்ராஹிம் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் முஹம்மது அஸ்லம் வரவேற்புரை நிகழ்த்தினார். கவின்முகில் உடன்குடி மு. முகமது யூசுப், அமீரக இந்தியர் நல்வாழ்வு பேரவையின் அமீரக துணைத் தலைவர் பரமக்குடி ஏ.எஸ். இப்ராஹிம் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று கல்வி மற்றும் சமூக மேம்பாட்டின் முக்கியத்துவம் குறித்து பேசினர். ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத், ஜஹாங்கீர், அமீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அமீரகத்தின் பணி நிறைவு பெற்று செல்லும் சீனி, சபியுல்லா உள்ளிட்டோர் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர். பொருளாளர் முஹம்மது அனஸ் நன்றி கூறினார். விழாவுக்கான ஏற்பாடுகளை ஜமாஅத் நிர்வாகிகள் சிறப்புடன் செய்திருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story