அபுதாபி அய்மான் சங்கம் நடத்திய மிஃராஜ் இரவு நிகழ்ச்சி

அபுதாபி அய்மான் சங்கம் நடத்திய மிஃராஜ் இரவு நிகழ்ச்சி

அய்மான் சங்கத்தின் சார்பில் மிஃராஜ் இரவு நிகழ்ச்சி அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் சென்டரில் சிறப்பான முறையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை சங்கத்தின் நிர்வாக செயலாளர் ஆடுதுறை முஹம்மது அப்துல் காதர் தொகுத்து வழங்க, சங்கத்தின் உறுப்பினர் நிஹ்மத்துல்லா திருக்குர்ஆன் வசனங்களை ஓதி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு அய்மான் சங்கத் தலைவர், கீழக்கரை H. M.முஹம்மது ஜமாலுத்தீன் தலைமை வகித்தார். சங்கத்தின் துணைத் தலைவர் ஆவை A.S.முஹம்மது அன்சாரி வரவேற்பு வழங்கினார். பைத்துல்மால் தலைவர் அதிரை அல்ஹாஜ் A.ஷாஹுல் ஹமீது அய்மான் முன்னுரை வழங்கினார். மிஃராஜ் முன்னுரை மௌலானா மௌலவி அப்ழலுல் உலமா M.கலீலுர் ரஹ்மான் ஆலிம் பிலாலி, துபாய் சுன்னத் வல் ஜமாத் பேரவை தலைவர், இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் துபாய் தலைவர் முஹிப்புல் உலமா கீழக்கரை முஹம்மது மஹ்ரூஃப் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

இந்நிகழ்ச்சியில் ஈரோடு ஜமால் முஹம்மது எழுதிய தியாகச்சுடர் திப்புசுல்தான் என்கின்ற நூல் வெளியிடப்பட்டது. இறுதியாக துணைத் தலைவர் மதுக்கூர் Y.M.அப்துல்லாஹ் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில், அபுதாபி ஜமாத்துல் உலமா சபை, அபுதாபி மௌலித் கமிட்டி, அபுதாபி லால்பேட்டை ஜமாத், அமீரக காயிதே மில்லத் பேரவை அமைப்பு நிர்வாகிகள், துபாயின் சமூக சேவகர் முதுவை ஹிதாயத், திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் பொதுச் செயலாளர் திண்டுக்கல் ஜமால் முகையதீன், காயல் லெப்பை தம்பி, துணைத் தலைவர் காதர் மீரான் பைஜீ உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அய்மான் சங்கத்தின் பொதுச் செயலாளர் லால்பேட்டை A.முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி, பொருளாளர் பசுபதிகோவில் சாதிக் பாட்சா, செயற்குழு உறுப்பினர் திருநெல்வேலி முஹம்மது ஹுசைன் ,செயற்குழு உறுப்பினர் கீழக்கரை அஜ்மல் தாஹிர், செயற்குழு உறுப்பினர் ராஜபாளையம் இப்ராஹிம், செயற்குழு உறுப்பினர் குத்தாலம் நவ்சாத் அலி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Tags

Next Story