இலங்கையில் முதுகுளத்தூர் எழுத்தாளர் நூல் வெளியீடு - காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் பங்கேற்பு

இலங்கையில் முதுகுளத்தூர் எழுத்தாளர் நூல் வெளியீடு - காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் பங்கேற்பு

 முதுகுளத்தூர் எழுத்தாளர் நூல்

இலங்கையில் முதுகுளத்தூர் எழுத்தாளர் நூல் வெளியீடு நடைபெற்றது.

இலங்கை நாட்டின் கொழும்பு நகரில் முதுகுளத்தூர் எழுத்தாளர் சம்சுல் ஹுதா பானு எழுதிய நாலு பேருக்கு நன்றி மற்றும் தாயில்லாமல் நான் இல்லை.. ஆகிய இரண்டு நூல்களும் வெளியிடப்பட்டது.

இந்த நூல் வெளியீட்டு விழாவுக்கு துபாய் ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத் தலைமை வகித்து பேசுகையில், முதுகுளத்தூர் எழுத்தாளரின் நூல் இலங்கை நாட்டில் வெளியிடப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

எழுத்தாளர் சம்சுல் ஹுதா பானு எழுதிய இரண்டு நூல்களையும் காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் வெளியிட அதனை அவரது மனைவி பெற்றுக் கொண்டார். அப்போது பேசிய காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன், பள்ளிப்படிப்பை முழுமையாக நிறைவு செய்யாவிட்டாலும் தனது அனுபவத்தின் மூலம் சம்சுல் ஹுதா பானு இரண்டு நூல்களையும் எழுதியுள்ளார்.

நாலு பேருக்கு நன்றி என்ற நூலானது தனது பிறந்த ஊரான முதுகுளத்தூர் நகரில் வசித்த மக்கள் குறித்து தத்ரூபமாக குறிப்பிட்டுள்ளார். தாயில்லாமல் நான் இல்லை…..என்ற நூலில் தனது வாழ்க்கை அனுபவங்களைக் கொண்டு, மலரும் நினைவுகளாக முப்பத்து நான்கு கட்டுரைகளாக தொகுத்து எழுதியுள்ளார்.

இந்த நூல் தனி மனிதனுக்கும், சமுதாயத்துக்கும் பயன்படும் வகையில் படைத்துள்ளார். இதுபோல் இன்னும் பல நூல்களையும் படைத்து இலக்கிய உலகுக்கு சிறப்பான பங்களிப்பை வழங்க வேண்டும் என வாழ்த்துகிறேன் என்றார்.

இந்த விழாவில் ஐ.டி.எம். சர்வதேச பல்கலைக்கழகத்தின் சட்ட மாணவர் மவுலவி அஹில் முஹம்மது சுபையர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story