துபாயில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா - திருச்சி சிவா எம்.பி பங்கேற்பு

துபாயில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா - திருச்சி சிவா எம்.பி பங்கேற்பு

திருச்சி சிவா 

அமீரக திமுக அமைப்பாளர் எஸ்.எஸ்.மீரான் ஏற்பாட்டில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி துபாய் தேரா பகுதியில் அமைந்துள்ள லேண்ட்மார்க் கிராண்ட் ஹோட்டலில் இரவு 7 மணியளவில் நடைப்பெற்றது.

அமீரக திமுக பொறுப்பாரும், வெளிநாடு வாழ் தமிழர் நலவாரிய உறுப்பினருமான எஸ்.எஸ்.மீரான் தலைமையில் நடைப்பெற்ற இந்த நிகழ்வை ஆசிஃப் மீரான் தொகுத்து வழங்கினார்.

இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக அயலக அணி செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான எம்.எம்.அப்துல்லா, மாநிலங்களவைக் குழுத் தலைவர் திருச்சி சிவா எம்.பி, தலைமை செயற்குழு உறுப்பினர் கீரை தமிழ் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லாஹ் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சாதனைகளையும், அவரது இலக்கிய படைப்புகள் குறித்தும் நினைவு கூர்ந்தார். கலைஞர் கொண்டுவந்த இலவசத் திட்டங்கள், மகளிர் கல்வி உதவித் தொகைத் திட்டங்கள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தியது குறித்தும், அரசு வருவாய் மேம்பட வழி வகுத்தது குறித்தும் விளக்கமாகப் பேசினார். கலைஞரின் ஜனநாயக அணுகுமுறை குறித்து உதாரணங்களைக் கூறினார். மேலும் அயலக அணியின் அவசியம் குறித்தும், செயல்பாடுகள் குறித்தும் எடுத்துரைத்தார்.

அதனை தொடர்ந்து பேசிய திமுக மாநிலங்களவைக் குழுத் தலைவர் திருச்சி சிவா, "ஐக்கிய அமீரகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தாலும் திமுக உடன்பிறப்புகளான உங்களையெல்லாம் சந்திப்பது மனநிறைவைத் தருகிறது" என்றார். தொடர்ந்து பேசியவர், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அமீரக திமுக பொறுப்பாளரும், வெளிநாடு வாழ் தமிழர் நல வாரிய குழு உறுப்பினருமான எஸ்.எஸ்.மீரானை பாராட்டினார்.

மேலும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கும் தனக்கும் இருந்த உறவையும், தன்னுடைய வளர்ச்சிக்கு இளம் வயதிலிருந்தே பெரும் ஆதரவாக இருந்த அவரது பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தார். கழகம் இக்கட்டான சூழலில் இருந்த போதெல்லாம் அண்ணா வழியில் இந்த கழகத்தை கட்டுக்கோப்பாக வைத்திருந்ததால் தான் தலைவர் கலைஞர் அனைவரின் மனதிலும் நிலைத்து நிற்கிறார். உலகெங்கும் வாழக் கூடிய தமிழர்கள் அனைவரும் இன்னும் நூறாண்டு காலம் தலைவர் கலைஞரை நினைத்து வைத்திருப்பார்கள் என்றார். தந்தை பெரியாரின் கையில் இருக்கும் தடி இன்னமும் பலருக்கு கிலியை ஏற்படுத்துகிறது என்றார்.

முன்னதாக வாழ்த்துரை வழங்குவதற்காக ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர் மன்சூர், ஆர்.ஜே. சாரா, தமுமுக அப்துல் ஹாதி,சசிகுமார், நஜ்முதீன், பிலால் அலியார், மதிமுக பாலா, மரியம் கபீர், எல்.கே.எஸ்.மீரான், ரெங்கநாதன், அய்மான் சங்க நிர்வாகிகள், முத்தமிழ் சங்க கேதன் ஷா, முதுவை ஹிதயாத்துல்லா, காயிதே மில்லத் பேரவை ஹமீத் ரஹ்மான், பரக்கத் அலி , அமீரகத் தமிழ் சங்கம் சிலு, ஆர்.ஜெ.சாரா, சமூக ஆர்வலர் ஶ்ரீலேகா, டயானா, ரெஙகராஜன், EMAAR இயக்குனர் ஆனந்த, மேலாளர் முபாரக், ஆர்.ஜே.அஞ்சனா, தமுமுக இப்ராஹிம், செல்வி சானியா, திருச்சி கோல்ட் ஹபீபுல்லாஹ் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

அதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் தலைவர் கலைஞர் அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்தும் வகையில் அவரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

நிறைவாக ஏ.ஜி.எம்.பைரோஸ்கான் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் எம்.எம்.முஸ்தஃபா, பிளாக் துலிப் செந்த்ஹில், இளமுருகன், வி.எம்.பிரபு, இர்ஷாத், பருத்தி‌ இக்பால், இஞ்சினியர் பாலா, கபீர், ஃபரீத், பாண்டியன், தாரிக், ஜெகபர் அலி மற்றும் அமீரக திமுக நிர்வாகிகளும், கழக உடன் பிறப்புகளும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story