எவரெஸ்ட் சிகரம் தொட்ட முதல் தமிழ் பெண் முத்தமிழ்செல்வி நாராயணன்
இந்தியா
எவரெஸ்ட் சிகரம் தொட்ட முதல் தமிழ் பெண் முத்தமிழ்செல்வி நாராயணன் அவர்கள் உலகில் உள்ள ஏழு கண்டங்களில் இருக்கும் உயரமான மலைகளை ஏறி சாதனை படைத்திட திட்டமிட்டு ஆறாவது சாதனை பயணமாக அண்டார்ட்டிகா கண்டத்தில் மவுண்ட் வின்சன் மலை ஏறிட சென்னையிலிருந்து நாளை விமான பயணம் புறப்பட இருப்பதை முன்னிட்டு காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலாளரும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசன் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் குன்றத்தூர் தெற்கு ஒன்றியச் செயலாளர், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை ஆ.மனோகரன் உள்ளார்.
Next Story