இலங்கையின் 76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய சூறா சபை

இலங்கையின் 76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய சூறா சபை

இலங்கையின் 76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய சூறா சபை கொழும்பு 7 ல் உள்ள ஜெயவர்த்தன மண்டபத்தில் விஷேட நிகழ்ச்சி நடைபெற்றது. இலங்கையின் சுதந்திரத்திற்கு முஸ்லிம்களின் பங்களிப்பு எனும் தொனிப்பொருளில் சூறா சபையின் தலைவர் ரி.கே.அசூர் தலைமை தாங்கினார். விசேட பேச்சாளர்களாக வல்பொலராகுல நிறுவனத்தின் பணிப்பாளர் கல்கந்தை தம்மானந்த தேரர், முன்னாள் தூதுவர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம் ஸுஹைர், பேருவளை ஜாமியா நளீமியா கலாபீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும் அதன் இஸ்லாமிய கற்கைநெறிகள் பீட பீடாதிபதியுமான அஷ் ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல் ஆகியோர் உரையாற்றினா். சபையின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி ரஷீத் எம் இம்தியாஸ் நன்றி கூறினார். இந்நிகழ்வில் சூறா சபையின் அங்கத்தவர்கள், சமயத் தலைவர்கள், கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story