அய்மான் சங்கம் நடத்திய இணையவழி ஊடக சான்றிதழ் கல்வி !

அய்மான் சங்கம் நடத்திய இணையவழி ஊடக சான்றிதழ் கல்வி !

இணையவழி ஊடக சான்றிதழ் கல்வி 

அபுதாபி அய்மான் சங்கம் நடத்தும் Digital Journalism இரண்டாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் மூன்றாம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி கூகுள் மீட் ஆன்லைன் வாயிலாக மிகச் சிறப்பாக நடைப்பெற்றது.

அமீரகத் தாய்ச்சபை அபுதாபி அய்மான் சங்கத் தலைவர் கீழக்கரை H. M. முஹம்மது ஜமாலுதீன் ஹாஜியார் விழாவிற்கு தலைமை தாங்கி தலைமையுரை ஆற்றினார். அய்மான் சங்க சர்வதேச ஒருங்கிணைப்பாளர் சகோதரர் காயல்பட்டினம் எஸ்.ஏ.சி.ஹமீத் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கினார்.

நிகழ்ச்சியின் துவக்க மாக இறைவனின் அருள்மறை திருக்குர்ஆன் திருவசனங்களை ஓதி இளவல் காயல் அப்துல் கைய்யூம் தொடங்கினார். அய்மான் பைத்துல் மால் பொதுச் செயலாளர் பார்த்திபனூர் நிஜாம் மைதீன் வரவேற்புரை ஆற்றினார். அய்மான் டிஜிட்டல் மீடியாவின் திட்ட இயக்குனர் பேராசிரியர் டாக்டர் முஹம்மது அஸ்கர் துவக்க உரை நிகழ்த்தினார்.

பைத்துல் மால் தலைவர் அதிரை A.சாகுல் ஹமீது ஹாஜியார், தமிழ்நாடு ஸ்டேட் உருது அகாடமி துணைத் தலைவர் டாக்டர் நயீமுர் ரஹ்மான் சாகிப், அய்மான் சங்கத் துணைத் தலைவர்கள் ஆவை A.S.முகம்மது அன்சாரி, காதர் மீரான் பைஜீ, சர்வதேச அமைப்பாளர் A. அப்துல் ரஹ்மான் ரப்பானி ஆகியோர் விழா வாழ்த்துரை வழங்கினர்.

தமிழ்நாட்டின் மூத்த பத்திரிகையாளர் சமஸ், சென்னை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் தங்க ஜெய சக்திவேல் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். தொடர்ந்து அய்மான் டிஜிட்டல் மீடியாவின் முன்னாள் மாணவர்கள் ஏராளமானோர் அவர்களுடைய அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.

விழாவின் இறுதியாக அய்மான் சங்க நிர்வாகச் செயலாளர் ஆடுதுறை S. முஹம்மது அப்துல் காதர் நன்றி கூறினார். அய்மான் சங்கத்தின் நிர்வாகிகள், அய்மான் டிஜிட்டல் மீடியாவின் முன்னாள் மாணவர்கள், மற்றும் அபுதாபியில் வசிக்கக் கூடிய தமிழ் சொந்தங்கள் கலந்து கொண்டனர். துஆவோடு நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.

இச்சிறப்புமிக்க விழாவினை இசைமுரசு FM ல் நேரலை செய்யப்பட்டது.

Tags

Next Story