அபுதாபி இந்து கோவிலில் வழிபாடு செய்த பொதுமக்கள்

அபுதாபி இந்து கோவிலில் வழிபாடு செய்ய பொதுமக்கள் திரளாக வருகை புரிந்தனர்.

அபுதாபி பாப்ஸ் அமைப்பு சார்பில் துபாய்-அபுதாபி ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் முரக்கா பகுதியில் 27 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட இந்து கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த பிரமாண்ட இந்து கோவிலை கடந்த பிப்ரவரி மாதம் பிப்ரவரி 14 ஆம் தேதி அமீரகத்துக்கு சுற்றுப்பயணம் வந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

அபுதாபியில் புதிதாக திறக்கப்பட்ட இந்து கோவிலை அமீரகத்தில் வசித்து வரும் பொதுமக்கள் பார்வையிட கடந்த 1 ஆம் தேதி முதல் அனுமதிக்கப்பட்டனர். காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்கள் வழிபாடு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் அபுதாபி, துபாய் உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் அதிகமாக வரத் தொடங்கினர்.

இதனால் கோவில் முழுவதும் விழாக் கோலம் பூண்டிருந்தது. கார் நிறுத்தும் இடங்களிலும் அதிகமான வாகனங்கள் இருந்தது. கோவிலுக்கு வரும் பக்தர்களை வரவேற்க கோவில் நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனையொட்டி கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடந்தது. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவரும் உற்சாகம் அடைந்தனர்.

இந்த கோவிலை பார்வையிட வந்த பொதுமக்கள் பலரும் அமீரகத்தில் இத்தகைய தொரு பிரமாண்ட கோவிலை பார்ப்பது மிகவும் சிறப்பாக இருக்கிறது என கூறினர்.

Tags

Next Story