துபாயில் ஆழிவாய்க்கால் மேம்பாட்டு மன்றம் சார்பில் பொங்கல் விழா

துபாயில் ஆழிவாய்க்கால் மேம்பாட்டு மன்றம் சார்பில் பொங்கல் விழா

துபாயில் ஆழிவாய்க்கால் மேம்பாட்டு மன்றம் சார்பில் பொங்கல் விழா

துபாயில் ஆழிவாய்க்கால் மேம்பாட்டு மன்றம் சார்பில் பொங்கல் விழா

துபாய் நகரின் அல் கவானிஜ் பகுதியில் அமைந்துள்ள முஷ்ரிப் தேசிய பூங்காவில் ஆழிவாய்க்கால் மேம்பாட்டு மன்றம் சார்பில் பொங்கல் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழக பாரம்பரிய முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விழாவை தஞ்சை மாவட்டம் ஓரத்தநாடு தாலுகாவை சேர்ந்த ஆழிவாய்க்கால் கிராமத்து வெளிநாடு வாழ் மக்கள் மற்றும் நண்பர்கள் ஒன்றிணைந்து 9 வது ஆண்டாக கொண்டாடி மகிழ்ந்தனர். விழாவில் நமது பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கலந்து கொண்டனர். அவர்கள் விளையாட்டு போட்டிகள், உறியடித்தல், கயிறு இழுத்தல், சிலம்பம் மற்றும் பாடல்களுடன் நாட்டியம் ஆகியவற்றில் பங்கேற்றனர். மேலும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். நீண்ட இடைவெளிக்கு பின்னர் சொந்த ஊரைச் சேர்ந்த மக்களை பொங்கல் விழாவில் சந்தித்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டது தங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக பங்கேற்றவர்கள் தெரிவித்தனர். மேலும் ஊர் நலனுக்கு தேவையான பணிகளை திட்டமிடுவது குறித்தும் பேசினர்.

Tags

Next Story