வாஷிங்டன் வட்டார தமிழ்ச்சங்கம் சார்பில் பொங்கல் விழா.
வாஷிங்டன் வட்டார தமிழ்ச்சங்கம் சார்பில் வாஷிங்டன் நகரில் வாழும் தமிழர்கள் பொங்கல் திருவிழா கொண்டாடினர். திருவிழா கொண்டாட்டத்தில் திருக்குறள் மறை ஓதல், மங்கல இசை, நம்ம ஊர்ப் பசங்க, பொங்கல் குழு நடனம், மண்வாசனையை நினைவு கூறும் வகையில் குழு நடனங்கள், பொங்கல் வரலாறு நாடகம், சரவெடி - குழு நடனம், பிரடெரிக் மழலைகள், தமிழரின் வீர விளையாட்டான சிலம்பம், ஒயிலாட்டம், மின்னும் நட்சத்திரங்கள், தமிழ் ராக்கரஸ்-குழு நடனம், தென்றல் முல்லை வெளியீடு, பிரெட்ரிக் Elite குழு நடனம், கலாட்டா குடும்பம், ஆதவன் சிறப்பு இசை நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக கோலப் போட்டிகளும் சமையல் போட்டிகளும் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சியில் சுபஸ்ரீ வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விஜயகுமார் முத்துசாமி, சித்ரா இசக்கி ராஜன், ஈஸ்வரி சிவராஜ், மீனாட்சி ராஜமாணிக்கம், பிரியங்கா, பிரியதர்ஷினி, சுபஸ்ரீ, பாலா, மது பிரியா, நவீனா, பிரேம், ஆனந்தி மனோகரன், லிபன்சி, பாலா குப்புசாமி ஸ்வப்னா பழனி, தீபா செந்தில்குமார், ஹரி தீபிகா மகாமலர் அனுராதா பாலசுப்ரமணியம், ஷீபா பிரேம், வெங்கட்ராமன், ஸ்டெர்லி சபரி முத்து ஆகியோர் செய்திருந்தனர். இந்த விழாவில் திருவள்ளுவர் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட குழந்தைகள் திருக்குறளையும் திருவள்ளுவரையும் அறிந்து கொள்ளும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அனைவரையும் கவர்ந்தது.