பெங்களூரு தமிழ்மன்றம், பாவாணர் பாட்டரங்கம் சார்பில் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி

பெங்களூரு தமிழ்மன்றம் மற்றும் பாவாணர் பாட்டரங்கம் பெங்களூரு மாநகரில் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

பெங்களூரு மாநகரில் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியாக பெங்களூரு தமிழ்மன்றம் மற்றும் பாவாணர் பாட்டரங்கம் இணைந்து நடத்திய 245 வது பாவாணர் பாட்டரங்கத்தைத் தலைமையேற்று மரபுப் பாவலர் பா.வெற்றிக் குமரன் வெகு சிறப்பாக நடத்தினார். இந்த அரியதொரு கவியரங்கத்தை நேயமிகுத் தமிழ் அறிஞர் மதிப்புமிகு நெருப்பலையார் உள்ளிட்ட, பெங்களூர் தமிழ் மன்றம் மற்றும் பாட்டரங்கப் பொறுப்பாளர்களும். தமிழ்நாட்டிலிருந்தும் பெங்களூரிலிருந்தும் நிகழ்ச்சியில் வந்து இனவெழுச்சிப் பொங்கல் பொருண்மையில் கவிதைப் படைக்க அனைத்து கவிஞர்களுக்கும் பொன்னாடைப் போர்த்தி சிறப்பு செய்து கவிக்கடல் விருதுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. 500 ரூபாய் மதிப்புள்ள நூல்களும் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. முன்னாள் பொருளாளா் சு.ஒளிமலரவன் தமிழ்தாய்வாழ்த்து பாடினார். வேலூர் பாவலர். பா. வெற்றி குமரன் கவியரங்கத் தலைமையேற்று நடத்தினார். கவிநிலவு இர.தேன்மொழி உள்ளிட்ட அனைத்து கவிஞர்களுக்கும் சிறப்பு செய்யப்பட்டது.

சட்டமன்ற உறுப்பினா் பி.ஏ.பைரத்தி பசவராஜ் பரிசுகளை வழங்கி உரையாற்றினார். தொடர்ந்து செல்வி பா.ரேஷ்மித்தா, செல்வி ச.சுப்ரியா ஆகியோர் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை பெங்களூரு தமிழ்மன்றத் தலைவர் டாக்டர் இரா.பாஸ்கர், செயலாளர் கு.மாசிலாமணி, பொருளாளர் மு.பொன்னுசாமி, பாவலர் சு. சதாசிவம், துணைத்தலைவர் மற்றும் மன்ற நிர்வாகிகள் பாவாணா் பாட்டரங்கம் இயக்குனா் நெருப்பலையார் இராம.இளங்கோவன், பொற்கிளி பாவலா் கொ.சி.சேகர் பொற்கிழிப் பாவலர் பாவாணர் பாட்டரங்கம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story