நெல்லை மக்களுக்கு வெளிநாடு வாழ் தமிழர்கள் சார்பில் நிவாரணப் பொருட்கள்

நெல்லை மக்களுக்கு வெளிநாடு வாழ் தமிழர்கள் நல அறக்கட்டளை மற்றும் நலச் சங்கம் சார்பில் நிவாரணப் பொருட்கள்

வீடு தேடி சென்று கடும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நெல்லை மக்களுக்கு உதவிய வெளிநாடு வாழ் தமிழர்கள் நல அறக்கட்டளை மற்றும் நலச் சங்கம் தமிழகத்தில் சென்னையை மழை வெள்ளம் சூழ்ந்து சகஜ நிலை ஓரளவு வந்த நிலையில் நெல்லை தூத்துக்குடி தென்காசி கன்னியாகுமரி என கடும் மழை வெள்ளம் சுனாமி போன்று சூழ்ந்து மக்களை நிலைகுலைய செய்து விட்டது.

1927 ஆம் ஆண்டில் இதே போன்று மழை வெள்ளம் வந்ததாக சொல்லப்படுகின்றது. அதன் பிறகு 2023 கடந்த ஆண்டு டிசம்பரில் 17,18 ஆகிய தேதிகளில் கொட்டி தீர்த்துள்ளது. இதனால் நெல்லை, தூத்துக்குடி முற்றிலும் பாதிக்கப்பட்டு மக்கள் வாழ்வாதாரம் இழந்த நிலையில் வீடு இழந்து உயிரை இழந்து ஆடு மாடுகளை இழந்து மாணவ, மாணவிகள் படிப்புக்கான ஆவணங்கள் அனைத்தையும் இழந்து வாடும் துர்பாக்கிய நிலை. தமிழ்நாடு அரசும், தன்னார்வு தொண்டு அமைப்புகளும் உதவி வரும் சூழலில் குவைத் மண்டல தலைவர் நூர் முகம்மது ஆலோசனைப்படி மாநில செயல் தலைவர் உஸ்மான் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் குவைத்தில் மக்களிடம் நிதி திரட்டபட்டது

சால்மியா Hand Healing டாக்டர் ஜேம்ஸ் பெரி அவர்கள் 200 தினார் தந்துள்ளார்கள். மிஸ்க் பள்ளி மூலம் 73 தினாரும், முர்காப் பகுதியில் மக்களிடம் பெற்றதில் 45 தினாரும் உறுப்பினர்கள் சார்பில் சுமார் 50 தினார் திரட்டப்பட்டு அனுப்பப்பட்டது. வெளிநாடு வாழ் தமிழர்கள் நல அறக்கட்டளை மற்றும் நலச்சங்கம் நெல்லை மாவட்ட தலைவர் டவுண் ஜாபர், பொருளாளர் அஜீஸ் மற்றும் நிர்வாகிகள் மாநில செயல் தலைவர் உஸ்மான் ஆகியோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 15 நாட்களுக்கான உணவு பொருட்கள், வாளி, குடம், மாணவர்களுக்கு பேக் மற்றும் சொட்டர் போன்றவற்றை வழங்கினர். மேலும் பிழைப்பிற்காக செல்லும் ஒரு சில வாகனங்கள் பழுதாகி இருப்பதாக சொல்லப் படுகிறது அதில் கூடுமானவரை ஒரு சிலருக்கு சரி செய்து கொடுக்கவும் சங்கம் முன் வந்துள்ளது. M.A.ஹைதர் குழுமம் கார்கோ டிராவல்ஸ் உம்ரா சர்வீஸ் நிறுவனர் Dr.S.M.ஹைதர் அலி உதவிட முன் வந்துள்ளார். குவைத்தில் இதற்கான பணியை முன்னெடுத்த நிர்வாகிகள் அஸ்பர், நபீல்,சுல்தான்,நவ்சாத் அலி சாரதி ஆகியோருக்கு மாநில நிர்வாகம் நன்றியைதெரிவித்து கொண்டது.

Tags

Next Story