ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் - 21 வது இரத்ததான முகாம்

ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் நஸீம் ரவ்தா கிளை 21வது இரத்ததான முகாம்

சவூதி அரேபியா நிறுவன தினத்தை முன்னிட்டு ரியாத் மத்திய மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் (IWF) - நஸீம் ரவ்தா கிளை மற்றும் கிங் சவுத் மெடிக்கல் சிட்டி இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் நஸீம் பகுதியில் நடமாடும் இரத்த வங்கி வாகனத்தில் சிறப்பாக நடைபெற்றது. இரத்ததான முகாமிற்கான அறிவிப்பு செய்தவுடன் அயராத உழைப்பாலும் , தொடர் அழைப்பு பணியாலும், இறைவனின் கிருபையாலும், நஸீம் பகுதிகளில் இருந்து 50 க்கும் மேற்பட்ட குருதிக் கொடையாளர்கள் கலந்து கொண்டு தங்களுடைய இரத்தத்தை தானமாக வழங்கினர் .

மேலும் நேரமின்மை காரணமாக , இன்னும் பல சகோதரர்கள் இரத்ததானம் செய்ய முடியாமல் வருத்தத்துடன் திரும்பி சென்றனர். இரத்ததானம் வழங்கிய அனைவர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் மற்றும் பழங்களுடன் பரிசுப்பை வழங்கப்பட்டது. முகாம் வெற்றிகரமாக நடைபெற்றதற்காக களப்பணியாற்றிய சகோதரர்களுக்கும் , காலை மற்றும் மதிய உணவு ஏற்பாடு செய்து தந்தவர்கள், வாகன ரீதியாக உதவி செய்தவர்கள் , ஊடக ஒத்துழைப்பு வழங்கியவர்கள் , மருத்துவ ஊழியர்களுக்கும் , இரத்த வங்கி ஒருங்கிணைப்பாளர்களுக்கும் , கிங் சவுத் மெடிக்கல் சிட்டி மருத்துவமனை நிர்வாகிகளுக்கும் , தண்ணீர் , தேநீர் , குளிர்பானம் மற்றும் பழங்கள் (அஜிஸியா கிளை) போன்றவைகளை ஏற்பாடு செய்து தந்த நல்லுங்களுக்கும், இந்த முகாம் சிறக்க எல்லா வகையிலும் உதவிய அனைவருக்கும் , மதிய உணவு வழங்கிய மலபார் உணவகத்திற்கும், நோட்டீஸ், பேனர், கேடயம் உள்ளிட்ட விளம்பர பதாதைகளை தயாரித்து தந்த டிரீம் பிரிண்ட் நிறுவனத்திற்கும் மண்டல & கிளை நிர்வாகிகளுக்கும் , செயற்குழு & பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளது.

Tags

Next Story