அஜ்மானில் தூய்மை பணி முகாம்

அஜ்மானில் தூய்மை பணி முகாம்

அஜ்மானில் அமீரக சுற்றுச்சூழல் குழுமம், அமீரக பருவநிலை மாறுபாடு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம், அஜ்மான் மாநகராட்சி ஆகியவற்றுடன் இணைந்து தூய்மை பணி முகாமை நடத்தியது. இந்த முகாமுக்கு அமீரக சுற்றுச்சூழல் குழுமத்தின் தலைவர் ஹபிபா அல் மராசி தலைமை வகித்தார். அவர் தனது உரையில் சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒவ்வொருவரது பங்கும் மிகவும் அவசியம் ஆகும். இந்த தூய்மை பணி முகாமில் 500 க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்றார். இந்த முகாமில் பள்ளிக்கூட, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவியர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story