அஜ்மானில் மரக்கன்றுகள் நடும் விழா

அஜ்மானில் மரக்கன்றுகள் நடும் விழா

அஜ்மான் போலீஸ் துறையின் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா அல் ஜோரா பகுதியில் நடந்தது. இந்த விழாவில் அஜ்மான் போலீஸ் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. அஜ்மான் மாநகராட்சி ஒத்துழைப்புடன் இந்த விழா நடந்தது. அமீரகத்தில் வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் 100 மில்லியன் மரக்கன்றுகள் நடும் இலக்கை அடைய உதவும் வகையிலும், 2050 ஆம் ஆண்டு பருவநிலை நடுநிலை திட்டத்தை அடைய உதவும் வகையிலும் இந்த பணி மேற்கொள்ளப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story